மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிராவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அஜித் பவார்! சூப்பர் சாதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajit Pawar, nephew of NCP president Sharad Pawar

    மும்பை: முன்னாள் மகாராஷ்டிரா மாநில முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் அந்த மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் அதாவது சுமார் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வென்றுள்ளன.

     Ajit Pawar, nephew of NCP president Sharad Pawar, wins by highest margin

    எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்றுள்ளன. மகாராஷ்டிரா நவநிர்மான் சோனா கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது.

    முதல்வர் பதவியும் கிடையாது.. 50/50 ஒப்பந்தமும் கிடையாது.. சிவசேனாவிற்கு டிமிக்கி கொடுக்கும் பாஜக!
    இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பெரும்பான்மையுடன் அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. ஏனெனில் மொத்தம் அங்கு 288 இடங்கள் உள்ள நிலையில் 145 இடங்களில் வென்றாலோ பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நிலையில் 161 இடங்களில் பாஜக கூட்டணி வென்றுள்ளதால் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

    மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவினாலும் பல தொகுதிகளை வென்று பாஜகவுக்கும் சிவசேனாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார், பாராமதி தொகுதியில் போட்டியிட்டார்.

    புனே மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோபிசந்த் படல்காரை 1,65,265 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதுதான் மகாராஷ்டிராவில் இந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் ஒரு வேட்பாளரின் வெற்றியாகும். அந்த சாதனையை அஜீத் பவார் படைத்துள்ளார். இத்துடன் பாராமதி தொகுதியில் 6 முறை அஜீத் பவார் வென்றுள்ளார்.

    சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார் போட்டியிட்ட பாராமதி தொகுதியில் 1,95,641 வாக்குகள் தான் பதிவாகி இருந்தது. இதில் 1,65,265 வாக்குகளை அஜீத் பவாரே கைப்பற்றி உள்ளார். பாஜக வேட்பாளர் கோபிசந்த் படல்கருக்கு 30,376 வாக்குகள் தான் கிடைத்தது.

    மகாராஷ்டிராவில் சிவசேனா வேட்பாளர் திலீப் பாவ்சாஹேப் லாண்டே வடக்கு மும்பையில் உள்ள சந்திவாலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நசீம் கானை மிககுறைந்த பட்சமாக 409 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிராவில் இப்போதைய தேர்தலில் இது தான் மிக குறைந்த வாக்கு வித்தியாசம் உள்ள வெற்றியாகும்.

    English summary
    Maharashtra election 2019 : Ajit Pawar, nephew of NCP president Sharad Pawar, wins by highest margin; Shiv Sena's Dilip Lande by lowest gap
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X