அள்ள அள்ள வந்த பல கோடி பணம்.. லக்கி பாஸ்கர் ஆக நினைத்த வங்கி மேலாளருக்கு பெரிய ட்விஸ்ட்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு சலவைக்கடையில் கட்டுக்கட்டாக சுமார் 5 கோடி பணம் இருந்துள்ளது. இந்த பணம் ஒரு வங்கிக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பணத்தை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் வங்கி மேலாளர் உள்பட 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். லக்கி பாஸ்கர் ஆக ஆசைப்பட்ட வங்கி மேலாளர் எப்படி வசமாக சிக்கினார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
லக்கி பாஸ்கர் படத்தில் வருவது போல் மகாராஷ்டிராவில் வங்கி மேலாளர் ஒருவர் பணத்தை அதிகப்படுத்த திருடியுள்ளார். அதாவது 5 கோடி கொடுத்தால் உடனே அதனை ஆறு கோடியாக சில நாட்களில் தருவதாக கூறியுள்ளார்கள். அதனை நம்பி பயணித்தவர் கடைசியில் சிறையில் கம்பி எண்ணி வருகிறார். பலருக்கும் உடனே பணக்காரன் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

அதற்காக எந்த எல்லைக்கும் போக தயாராக உள்ளார்கள். அப்படி போகிறவர்கள், பில்லா படத்தில் வரும் வசனமான, நாம வாழணும்னா யார வேணாலும் கொல்லலாம் என்பதை அப்படியே கடைபிடிக்கிறார்கள். ஆனால் கடைசியில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அப்படி வாழ்க்கையை தொலைத்த அன்லக்கி பாஸ்கர் ஒருவரின் கதை தான் இது.
மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டம் தும்சர் பகுதி இந்திரா நகரில் உலர் சலவை கடை (டிரை கிளினிங் ஷாப்) ஒன்று செயல்பட்டு வருகறிது. இந்த கடையில் வங்கிக்கு சொந்தமான ரூ.5 கோடி ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பண்டாரா மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.. என்னடா இது, ஒரு சலவைக்கடையில் 5 கோடி பணமா.. என்று ஆச்சரியமாக கேட்ட போலீசார், சந்தேகத்தை உறுதி செய்வதற்காக
குறிப்பிட்ட உலர் சலவை கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது ரகசிய தகவலின் படியே, சலவைக் கடைக்குள் ஒரு பெட்டியில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த பணத்தை எண்ணி பார்த்த போது ரூ.5 கோடி இருந்தது. அந்த பணத்தை காவல் அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சலவைக்கடைக்கு பணம் எப்படி வந்தது என்று விசாரித்தனர்.
விசாரணையில் அந்தப்பணம் பிரபல தனியார் வங்கியின் கிளைக்கு சொந்தமானது என தெரியவந்தது. குறிப்பிட்ட தனியார் வங்கி கிளை மேலாளரிடம் சிலர் தங்களிடம் ரூ.5 கோடி தந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் அதை ரூ.6 கோடியாக திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனால் லக்கி பாஸ்கர் பட பாணியில் அவரும் பணத்தை கொடுக்க தயாரானார். மேலும் வங்கி மேலாளர் ரூ.5 கோடியை வங்கியில் இருந்து எடுத்து வந்து அந்த பணத்தை கொடுத்துள்ளாராம். அப்படி கொடுத்த பணம் உலர் சலவை கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த போதுதான், போலீசாரால் மீட்கப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட தனியார் வங்கி கிளையின் மேலாளர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும் போது, “ குறிப்பிட்ட தனியார் வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். அதிகாரிகள் வந்தவுடன் அவர்களிடம் இருந்து கூடுதல் தகவல் பெறப்படும்” என்று கூறினார்கள். சலவை கடையில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications