மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த வார்த்தை.. ஏஆர் ரஹ்மான் பாடலை அதற்குத்தான் பார்த்தேன்.. ஆனால் இப்போது.. ஆனந்த் மகிந்திரா ட்வீட்

Google Oneindia Tamil News

மும்பை: மூப்பில்லா தமிழே தாயே என்ற தமிழ் கீதத்தை தன்னால் பார்க்காமல் இருக்கவே முடியாது என்றும் அதற்கான காரணத்தையும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் வாயிலாக தமிழிலேயே தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டு அதாவது சித்திரை மாதம் 1 ஆம் தேதியை கொண்டாடும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெள்ளிக்கிழமை அன்று "மூப்பில்லா தமிழே தாயே" என கீதத்தை வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் பெண் பாலியல் வழக்கு.. வேகம் எடுக்கும் சிபிசிஐடி விசாரணை.. கைதான 4 பேரின் செல்போன்கள் ஆய்வு விருதுநகர் பெண் பாலியல் வழக்கு.. வேகம் எடுக்கும் சிபிசிஐடி விசாரணை.. கைதான 4 பேரின் செல்போன்கள் ஆய்வு

மார்ச் 24 ஆம் தேதி துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் ரஹ்மானின் கச்சேரியில் இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அது போல் வெள்ளிக்கிழமை மாஜாவின் யூடியூப் சேனலில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது.

ஆல்பம் பாடல்

ஆல்பம் பாடல்

இந்த ஆல்பம் பாடல் உலகெங்கும் அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மூப்பில்லா தமிழே தாயே என தொடங்கும் இந்த பாடலின் பெயருக்கு ஏற்ப உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் புகழை குறிக்கும் வகையில் இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் கவிஞர் தாமரை எழுதியுள்ளார்.

தமிழ் பண்பாடு

தமிழ் பண்பாடு

பழங்கால தமிழ் பண்பாட்டையும் உலகெங்கிலும் வியாபித்து இருக்கும் தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்டு வரும் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த காலத்து இளைஞர்கள் தமிழ் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் இசை

ஏ ஆர் ரஹ்மான் இசை

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து தயாரித்துள்ள இந்த பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ. ஆர். அமீன், அமீனா, கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் உள்ளிட்டோர் ரஹ்மானுடன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். மாஜா தயாரித்துள்ள இந்த பாடலை Studio MOCA நிறுவனத்தின் அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

ஆனந்த் மகிந்திரா ட்வீட்

ஆனந்த் மகிந்திரா ட்வீட்

இந்த பாடலை தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த வகையில் மும்பை தொழிலதிபரான ஆனந்த் மகிந்திராவும் இந்த பாடலை விரும்புகிறார். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இதில் இடம்பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அருமையான இசை மற்றும் வீடியோ என தெரிவித்துள்ளார். இந்த பாடலில் கருப்பு நிற ஜாவா பைக் இடம்பெற்றுள்ளது. இது 1980 களில் பிரபலமானவை. தற்போது மீண்டும் இந்த பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ 2 லட்சம் ஆகும்.

English summary
Businessman Anand Mahindra's tweet about Moopilla Thamizhe Thaaye Tamil anthem which gives pride for Tamil language.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X