அடக்கொடுமையே.. டீ வேண்டாம் என்ற கலெக்டர்.. மகாராஷ்டிரா அமைச்சர் கேட்ட கேள்வி.. வெடித்த சர்ச்சை
மும்பை: மகாராஷ்டிராவில் டீ வேண்டாம் எனக்கூறிய கலெக்டரிடம் மகாராஷ்டிரா அமைச்சர் கேட்ட கேள்வி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருந்தார். சமீபத்தில் இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இதில் சிவசேனா அதிருப்தி அணியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல் அமைச்சராக உள்ளார். துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார்.

அமைச்சர் ஆய்வு
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த புதிய கூட்டணி ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக செயல்பட்டு வருகின்றனர். விவசாயத்துறை அமைச்சராக அப்துல் சதார் உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் அங்கிருந்து சிவசனோவில் இணைந்த நிலையில் தற்போது ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளராக உள்ளார்.

விவசாயத்துறை அமைச்சர்
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல இடங்களில் அதிகளவில் கனமழை பெய்தது. இதனால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. பயிர்சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார். இதையடுத்து விவசாயத்துறை அமைச்சர் அப்துல் சதார் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

தேநீர் வேண்டாம் என்ற கலெக்டர்
அதன்படி பீட் மாவட்டத்தில் உள்ள கேவ்ரே தாலுகாவில் அமைச்சர் அப்துல் சதார் விசிட் செய்தார். பயிர் சேதம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தினார். இநு்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது. ஆனால் கலெக்டர் ராதாபினோத் சர்மா தனக்கு தேநீர் வேண்டாம் என்று தெரிவித்தார். இதை கவனித்த அப்துல் சதார் சட்டென அவரை பார்த்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டார்.

மதுபானம் குடித்து இருக்கீங்களா?
அதாவது தேநீர் வேண்டாம் என கூறிய கலெக்டர் ராதாபினோத் சர்மாவை நோக்கி அமைச்சர் அப்துல் சதார், "நீங்கள் மதுபானம் குடித்து இருக்கிங்களா?'' என வினா எழுப்பினார். இதனால் கலெக்டர் அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அமைச்சர் என்பதால் அவர் சமாளித்தார். இதற்கிடையே சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்நிலையில் கலெக்டரை நோக்கி எதேச்சையாக அமைச்சர் அப்துல் சதார் கேள்வி கேட்கவில்லை. இவர் உள்நோக்கத்துடன் தான் கேள்வி கேட்டுள்ளனர் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.இதுபற்றி மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த், "இது மழை வெள்ளச்சேத சுற்றுப்பயணமா? அல்லது மது குடிக்கும் சுற்றுப்பயணமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications