• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“டெல்லி வரை ஆள் இருக்கு.. தடம் தெரியாம ஆக்கிருவேன்”.. மிரட்டும் பாஜக மாவட்ட தலைவர்.. பகீர் புகார்!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாக் கொக்கைனை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், அது என்ன என்பது குறித்த இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர்.

போதைப்பொருள் பயன்பாடு சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போதைப்பொருள் சப்ளைவை மிக எளிமையானதாக மாற்றுகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு என்பது சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

'ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்'.. பாய்ந்த பாஜக.. சர்ச்சையில் சிக்கிய சசிதரூர்.. என்னாச்சு? 'ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்'.. பாய்ந்த பாஜக.. சர்ச்சையில் சிக்கிய சசிதரூர்.. என்னாச்சு?

பாஜக மாவட்ட தலைவர்

பாஜக மாவட்ட தலைவர்

திருநெல்வேலி மாவட்ட பாஜக அமைப்பு சாரா துணைத்தலைவராக இருந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தற்போதைய பாஜக நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் மீது பணமோசடி புகார் சுமத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது பெயர் ஆர்.சுபாஷ் சந்திர போஸ். திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் முன்னாள் அமைப்பு சாரா மாவட்ட துணை தலைவராக இருந்தேன். நான் திருநெல்வேலி மாவட்டம் பாலாமடையை சேர்ந்தவன்.

தயாசங்கர்

தயாசங்கர்

தற்போது திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் தலைவராக உள்ள தயாசங்கர் என்னிடம் கூட்டாக குவாரி தொழில் செய்வோம் எனக் கூறி முதலீடுக்கு 40 லட்சம் பணம் கேட்டார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, எனது சகோதரியின் கணவர் சண்முக சுந்தரத்திடம் பேசி அவரிடம் பணத்தை பெறுவோம், அவரை தொழிலில் கூட்டாக சேர்க்கிறேன் எனக் கூறி எனது அத்தான் சண்முக சுந்தரத்திடம் ரூபாய் 40 லட்சம் பெற்று தயாசங்கரிடம் கொடுத்தேன்.

 தடம் தெரியாம ஆக்கிருவேன்

தடம் தெரியாம ஆக்கிருவேன்

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம். அதனால் எங்களுக்கு தரவேண்டிய பணம் 40 லட்ச ரூபாயை பல முறை கேட்டோம் அதன் பேரில் 15 லட்ச ரூபாய் மட்டும் தந்தார். மீதி பணம் 25 லட்ச ரூபாயை இப்போது தருகிறேன் அப்போது தருகிறேன் எனக் கூறி ஏமாற்றி வருகிறார். இதனிடையில் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டால் "உன்னால ஆனதைப் பாரு.. பணமும் கிடையாது ஒண்ணும் கிடையாது.. எங்க வேணும்னா போய் சொல்லு.. எனக்கு டெல்லி வரை ஆள் இருக்கு.. ஆள் தெரியாம பேசாத.. தடம் தெரியாம ஆக்கிருவேன்" என மிரட்டுகிறார்.

 தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்

தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்

நேர்மையான அரசியல் கட்சியான பாஜகவுக்கும் அதன் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் திருநெல்வேலி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இச்செய்தியை மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கவனத்திற்கு செல்லும் படி உதவவேண்டும். கூட்டாக சேர்ந்து குவாரி நடத்தி பணம் தராமல் மோசடி செய்வதும் இல்லாமல் பணத்தை கேட்டால் மிரட்டும் திருநெல்வேலி பாஜக மாவட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவில் பரபரப்பு

பாஜகவில் பரபரப்பு

பாஜக முன்னாள் நிர்வாகியின் இந்த புகார் நெல்லை மாவட்ட பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அண்ணாமலை கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வெளிப்படையாக ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருப்பதால், தயாசங்கர் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

English summary
BJP executive has openly complained on Facebook that Tirunelveli district BJP president Dayashankar cheated him by not giving him money and threatened to kill him if he asked for money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X