துப்பாக்கியால் காலில் சுட்டுக்கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையில் வீட்டில் இருந்த போது தவறுதலாக தனது காலில் சுட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
பிரபல பாலிவுட் நடிகரான கோவிந்தா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 4.45 மணியளவில் வீட்டில் இருந்த போது தவறுதலாக காலில் சுட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. தனது ரிவால்வரை சுத்தம் செய்து கொண்டு இருந்ததாகவும் அப்போது, எதிர்பாராத விதமாக காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்க்ள் கூறியுள்ளனர். காலில் ஏற்பட்ட காயத்திற்காக கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் உடல் நலம் தேறிய பிறகு அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
பாலிவுட்டில் பிரபல நடிகர் ஆன கோவிந்தா காலில் துப்பாக்கி கொண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவிந்தாவின் மேலாளர் கூறுகையில், "நடிகரும் சிவசேனா தலைவருமான கோவிந்தா கொல்கத்தாவிற்கு செல்ல இன்று தயாராகிக் கொண்டு இருந்தார். அவரிடம் உரிமம் பெற்ற ரிவால்வர் உள்ளது.
அவர் கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்தது. அப்போது, துப்பாக்கியில் இருந்த குண்டு காலில் பாய்ந்தது. வலியால் துடித்த கோவிந்தா உடனடியாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது. தற்போது உடல் நலத்துடன் உள்ளார்" என்று கூறினார்.
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிதாக படங்களில் கோவிந்தா நடிக்கவில்லை. இருந்தாலும் 80, 90களில் கோவிந்தாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரக கோவிந்தா இருந்தார். எனினும், அதன்பிறகு அவருக்கு திரை வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் அவருக்கு படங்கள் எதுவும் இல்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications