ஒரு பெண்ணிடம் 'ஐ லவ் யூ' என்று சொல்வது பாலியல் துன்புறுத்தல் இல்லை.. மும்பை உயர் நீதிமன்றம் கருத்து
மும்பை: ஆண் ஒருவர் வெறுமனே 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்வது, உணர்ச்சிகளின் வெளிப்பாடு மட்டுமே என்றும் அது பாலியல் துன்புறுத்தல் இல்லை என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. பாலியல் நோக்கம் இல்லாமல் ஒரு பெண்ணிடம் வெறுமனே "ஐ லவ் யூ" என்று சொல்வது பாலியல் துன்புறுத்தல் எனக் கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு டீன் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 35 வயது நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அது தொடர்பான வழக்கு மும்பை ஐகோர்ட் நாக்பூர் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஊர்மிளா ஜோஷி-பால்கே இந்தக் கருத்துகளைக் கூறினார்.

மும்பை ஐகோர்ட்
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரை விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவில், ஒரு பெண்ணின் தகாத நோக்கில் தொடுதல், பலவந்தமாக ஆடை களைதல், முறையற்ற செய்கை, முறையற்ற கருத்துகள் போன்றவையே பாலியல் செயல்களாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
புகாரின்படி, அந்த நபர் நாக்பூரில் 17 வயது சிறுமியை வழிமறித்து, அவளது கையைப் பிடித்து 'ஐ லவ் யூ' என்று கூறியுள்ளார். இந்த வழக்கை முதலில் நாக்பூர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 2017ல் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபரைக் குற்றவாளி எனச் சொல்லி நாக்பூர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இருப்பினும், அந்த நபர் மேல்முறையீடு செய்த நிலையில், அது உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் அந்த நபர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்ய உத்தரவிட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் உண்மையான நோக்கம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பு கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் எந்தவொரு சூழ்நிலையும் இல்லாததால், உயர் நீதிமன்றம் அந்த நபரின் தண்டனையை ரத்து செய்தது.
"ஐ லவ் யூ"
உயர்நீதிமன்ற நாக்பூர் பெஞ்ச் மேலும் கூறுகையில், "சட்டப்படி 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று கூறுவது மட்டும் பாலியல் உள்நோக்கம் ஆகாது.. 'ஐ லவ் யூ' என்று சொல்வதன் பின்னணியில் பாலியல் ரீதியான நோக்கம் இருக்கிறது என்பதை நிரூபிக்க ஏதேனும் கூடுதல் ஆதாரம் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
அந்தப் பெண் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது அந்த நபர் வழிமறித்து இருக்கிறார். பிறகு அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து, அவள் பெயரைக் கேட்டுள்ளார். பிறகு திடீரென 'ஐ லவ் யூ' என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. இதனால் பதறிய அந்தப் பெண், அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடியுள்ளார். பிறகு தனக்கு நடந்த சம்பவத்தைத் தனது தந்தையிடம் கூறினாள். அதைத் தொடர்ந்தே இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வழக்கு பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் தொல்லை என்பதற்குள் வராது என்று மும்பை ஐகோர்ட் நாக்பூர் அமர்வு கூறியுள்ளது. நீதிபதிகள் மேலும் கூறுகையில், "ஒரு பெண்ணின் தகாத நோக்கில் தொடுதல், பலவந்தமாக ஆடை களைதல், முறையற்ற செய்கை, முறையற்ற கருத்துகள் போன்றவையே பாலியல் செயல்களாகக் கருதப்படும்.
ஆதாரம் தேவை
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று பாலியல் உள்நோக்கத்துடன் தான் கூறினார் என்பதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லை. யாராவது ஒருவர் மற்றொரு நபரைப் பார்த்துக் காதலிப்பதாகச் சொன்னாலோ அல்லது தனது உணர்வுகளை வெளிப்படுத்தினாலோ, அது பாலியல் உள்நோக்கம் எனக் கருத முடியாது.












Click it and Unblock the Notifications