ஜோடோ யாத்திரைக்கு 'பிரேக்'.. குஜராத் பக்கம் வண்டியை விடும் ராகுல்.. காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டு இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, ஜோடா யாத்திரைக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் காங்கிரசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குஜராத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 என இரு கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக ஆர்வம் காட்டி வருகிறது.
கால் நூற்றாண்டு காலமாக ஆட்சி அரியணையை பிடிக்க கடும் போட்டி வரும் காங்கிரஸ் இந்த முறை பாஜகவை வீழ்த்த வேண்டும் முழு வீச்சில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி
இதற்கான கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் கூடிய தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது. இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணமாக சென்று கொண்டு இருக்கிறார். தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப்பயணம் சென்று கொண்டிருக்கிறது.

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில்..
இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காமல் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றதும்.. தற்போது குஜராத்தில் கவனம் செலுத்தவில்லை என்றும் பாஜக ராகுலை சாடி வருகிறது. இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரைக்கு ஓய்வு அளித்து விட்டு ராகுல் காந்தி குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது உற்சாகத்துடன்
காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்தனர். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் பிரசாரத்தால் தொண்டர்கள் புது உற்சாகத்துடன் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவார்கள் என்றும் பொதுமக்கள் மத்தியிலும் ராகுலின் பிரசாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு பதிலடி கொடுக்கு விதமாக பிரசாரம்
ராகுல் காந்தியை விமர்சித்து வரும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கு விதமாக ராகுலின் தேர்தல் பிரசாரம் அமையும் என்றும் குஜராத் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதற்கிடையே அடுத்த 15 தினங்களில் குஜராத்தில் மெகா பிரசார கூட்டங்களையும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 125 தொகுதிகளில் பிரசார கூட்டங்களை முன்னெடுக்க வியூகம் வகுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரையும் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளது.

முக்கிய தலைவர்கள் பிரசாரம்
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் , காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

வேட்பாளர் பட்டியல்
பாஜகவும், ஆம் ஆத்மியும் முழு வீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,காங்கிரஸ் கட்சியும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருப்பது குஜராத்தில் தேர்தல் களத்தை பரபரக்க வைத்துள்ளது. இதற்கிடையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி 6-வது கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுவரை 142 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது.

டிசம்பர் 8ஆம் தேதி
குஜராத்தில் 27 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைக்கும் திட்டத்துடன் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. வரும் டிசம்பர் 8 ஆம் தேதி குஜராத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்று வாக்காளர்களின் முடிவில் தெரிந்து விடும்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications