சடலத்துக்கு 3 நாள் சிகிச்சை தந்த டாக்டர்.. பணத்தையும் வாரி சுருட்டி.. கொரோனாவைவிட கொடூரம்..!
இறந்த நோயாளிக்கு சிகிச்சை பார்த்து பணம் பறித்துள்ளது ஒரு ஆஸ்பத்திரி
மும்பை: ரமணா படத்தில் வருமே அதே மாதிரி, சிகிச்சைக்க வந்த ஒரு கொரோனா நோயாளி இறந்துவிட்டார்.. ஆனால், இந்த விஷயத்தை மறைத்து, பிணத்துக்கு 3 நாள் வைத்தியம் பார்த்து காசை பறித்துள்ளது ஒரு ஆஸ்பத்திரி.
தற்போது வடமாநிலங்களில் தொற்று அதிகமாகி உள்ளது.. தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது.. உயிர்பலியும் அதிகமாகி உள்ளது..!
இதனால் நோயாளிகளை பறிகொடுத்தவர்கள் பல சிக்கல்களில் தவித்துள்ளனர்.. அந்த வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது..

ஆஸ்பத்திரி
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் பகுதியில் அந்த தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.. இங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளியை கடந்த ஏப்ரல் மாதம் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்தனர்.. அட்மிஷன் போட்டவுடனேயே ரூ.50 ஆயிரம் பணம் கட்ட சொல்லி உள்ளனர்.. ஆனால், அதற்குள் நோயாளி சீரியஸ் கண்டிஷனுக்கு போய்விட்டதால், 20-ந்தேதி ஐசியூவுக்கு மாற்றப்பட்டுள்ளார்..

ஊசி மருந்து
அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஊசி மருந்து செலுத்துவதற்காக ரூ.35 ஆயிரம் செலுத்தும்படி நோயாளியின் மனைவியிடம் தெரிவித்தனர். அவரும் பணத்தை செலுத்திவிட்டார்.. ஆனால், இந்த பணத்தை செலுத்திய பின்னர் 3 நாள் கழித்து அதாவது 24-ந்தேதி ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நோயாளியின் மனைவியிடம் மறுபடியும் கட்டணம் செலுத்தும்படி கேட்டுள்ளனர்... இதனால் அவர் சம்பவத்தன்று ரூ.40 ஆயிரம் ரொக்கமாகவும், மீதி ரூ.50 ஆயிரம் ஆன்லைன் மூலமும் பணத்தை கட்டியுள்ளார்..

ஆஸ்பத்திரி
மொத்த பணத்தையும் ஆஸ்பத்திரி பெற்று கொண்டுவிட்டது.. பிறகு நோயாளி இறந்துவட்டதாக கூறி இறந்ததற்கான சான்றிதழை தந்தது.. அப்போதுதான் தெரிந்தது, அதில், கடந்த 21-ந் தேதியே நோயாளி இறந்திருக்கிறார் என்று.. 3 நாளும் பிணத்தை வைத்துக் கொண்டு, சிகிச்சை பார்ப்பது போல நடித்து, பணத்தை பறித்துள்ளனர் என்பது அம்பலமானது.. இதை பார்த்ததும் நோயாளியின் மனைவி கொந்தளித்து விட்டார்..

கோர்ட்
இந்த சம்பவம் குறித்து அங்குள்ள கோர்ட்டில், ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தும்படி சிவாஜிநகர் போலீசாருக்கு கோர்ட்டும் உத்தரவிட்டது... அதன்படி, சிவாஜி நகர் போலீசார் சம்பந்தப்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.. விசாரணையும் நடந்து வருகிறது...!

வேதனை
எத்தனையோ டாக்டர்களும், நர்ஸ்களும் இந்த ஆபத்தான காலத்தில், குடும்பத்தையும், தங்கள் உடல்நலனையும் மறந்து, உயிரையே பணயம் வைத்து கொண்டு வேலை பார்த்து வரும் நிலையில், ஒருசில ஆஸ்பத்திரிகள் இப்படி கொரோனாவை வைத்து காசு பார்த்து வருவது வேதனையைதான் தருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications