மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்போவது காங்கிரஸ் கூட்டணிதான்.. விஜய் வசந்த் எம்.பி சொல்லும் சீக்ரெட்!
மும்பை: மகாராஷ்டிராவில் இந்த முறை காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி அமைக்கப் போகிறது என்று உறுதியாக சொல்கிறார் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்பி விஜய் வசந்த்.
மும்பையில் தாராவி உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் விஜய் வசந்த். மகாராஷ்டிரா களத்தில் "ஒன் இந்தியா தமிழ்" குழு நேரடியாக செய்தி சேகரித்து வரும் நிலையில், அங்கிருந்தபடி "ஒன்இந்தியாதமிழ்" எடிட்டர் வீரக்குமரனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார் அவர்.

பேட்டியின் முழு வீடியோவையும் இந்த லிங்க்கில் கிளிக் செய்து பார்க்கலாம்:
இந்த வருடம் நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி பாஜகவை மிரட்டியது போல சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார் அவர். லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 17 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருந்தது.
சட்டசபை தேர்தலில், கூட்டணி பலத்தால் காங்கிரஸ் கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் கொண்டு வர உள்ள மேம்பாட்டு திட்டம் பற்றியும் கருத்தை பகிர்வு செய்தார்.
தாராவி மேம்பாட்டு திட்டத்தை பாஜக தங்களுக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபரின் கம்பெனிக்கு கொடுத்திருப்பதாகவும் இதனால் மக்களை காலி செய்ய நிர்பந்திப்பதாகவும், இந்த தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications