என்ட்ரியான அந்த நபர்! ‛இந்தியா’ கூட்டத்தில் காங்கிரஸ் அதிருப்தி! சமாதானப்படுத்திய தலைவர்கள்- களேபரம்
மும்பை: மும்பையில் நடந்த ‛இந்தியா' கூட்டணியின் 2 நாள் ஆலோசனை கூட்டத்தில் கபில் சிபல் என்ட்ரியால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியடைந்த நிலையில் சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் சமாதானம் செய்த பரபரப்பு சம்பவம் நடந்தது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் தேர்தலை முன்கூட்டியே நடத்த பிரதமர் மோடி திட்டமிடலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் பரபரப்பு என்பது இப்போது இருந்தே தொடங்கி விட்டது.

இதற்கிடையே தான் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்து நோக்கத்தில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2 வது ஆலோசனை கூட்டம் பெங்களூரிலும் நடந்தது.
இந்நிலையில் தான் 2வது ஆலோசனை கூட்டம் நேற்று, இன்று என மொத்தம் 2 நாட்கள் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே தலைமை வகித்தனர். கூட்டத்தில் மொத்தம் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், விசிக தலைவர் திருமாவளவன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள பற்றி விவாதிக்கப்பட்டது. மாநிலங்கள் வாரியாக தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டது. மேலும் ‛இந்தியா' கூட்டணி சார்பில் ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழு, சமூக வலைதள குழு உருவாக்கப்பட்டது. இத்தகைய நிலையில் தான் இந்த கூட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
அதாவது காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகிய மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான கபில் சிபல் இன்று காலையில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்ட அரங்கிற்கு வந்தார். அவரை கூட்டத்துக்கு யாரும் அழைக்காத நிலையில் அவர் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். இதை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உத்தவ் தாக்கரேவிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதை பார்த்ததும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் மற்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாக ஆகியோர் கேசி வேணுகோபாலை சமாதானப்படுத்தினர்.
தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் இணைந்து இருப்பது தான் முக்கியம். கபில் சிபல் வருகையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டத்துக்கு வந்துள்ள அவரை எப்படி வெளியேறும்படி கூற முடியும். இதனால் அமைதி காத்து இருங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும் என சமாதானப்படுத்தினர். இதையடுத்து கேசி வேணுகேபால் அமைதியாகினர்.
இதையடுத்து ‛இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கபில் சிபல் பங்கேற்றார். அதன்பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து எடுத்து கொண்ட குழு போட்டோவில் அவர் இடம்பிடித்திருந்தார். இருப்பினும் கபில் சிபல் வருகைக்கு ராகுல்காந்தி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications