துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்! மும்பை மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி! சிவசேனா கோட்டையை தகர்த்த பாஜக
மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. கடந்த முறையை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருக்க சிவசனோவின் கோட்டையாக இருக்கும் மும்பை மாநகராட்சியை பாஜக கைப்பற்றி அசத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 29 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளன. நாட்டிலேயே அதிக மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மாநகராட்சி என்றால் அது மும்பை தான்.
இன்னும் சொல்லப்போனால் சில மாநிலங்களில் பட்ஜெட் மதிப்டை காட்டிலும் மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் மதிப்பு அதிகமாகும். மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால் 114 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சி மும்பை மாநகராட்சியில் இருந்து துடைத்தெறியப்பட்டுள்ளது. அதாவது மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை படுமோசமாகி உள்ளது. மொத்தம் 15 வார்டுகளில் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன.
காங்கிரஸ் கட்சி இந்த முறை 152 வார்டுகளில் களமிறங்கியது. மீதமுள்ள வார்டுகளை விபிஏ, ராஷ்ட்ரிய சமாஜ் பக்சா மற்றும் இந்திய சுதந்திர கட்சி (கவாய் பிரிவு) உள்ளிட்டோருக்கு வழங்கியது. இதில் காங்கிரஸ் வெறும் 15 வார்டுகளில் தான் முன்னிலையில் உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 31 வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சுருங்கி உள்ளது.
மாலை 5 மணி நிலவரப்படி பார்த்தால் பாஜக - சிவசேனா கூட்டணி மொத்தம் 130 வார்டுகளில் முன்னிலை வகித்தது. அதேவேளையில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (உத்தவ் அணி) மற்றும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி 71 வார்டுகளில் முன்னிலை வகித்தது. இதில் உத்தவ் தாக்கரே அணியின்ர் 62 வார்டுகளிலும், ராஜ்தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியினர் 9 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணி ஒரு வார்டிலும் மட்டுமே முன்னிலை வகித்தது.
மும்பை மாநகராட்சியை எடுத்து கொண்டால் கடந்த 28 ஆண்டுகளாக சிவசேனாவை சேர்ந்தவர் தான் மேயராக இருந்து வந்துள்ளார். இதன்மூலம் கடந்த 1996 க்கு பிறகு முதல் முறையாக மும்பை மாநகராட்சிக்கு பாஜகவை சேர்ந்த ஒருவர் மேயராக உள்ளார். இப்போது அந்த வரலாறு மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications