பற்றி எரியும் மராட்டியம்! 2 எம்எல்ஏ வீட்டுக்கு தீவைப்பு.. மாரத்தா இடஒதுக்கீடு போராட்டத்தால் ஊரடங்கு
மும்பை: மாரத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் வன்முறை வெடித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் பீட் மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அங்கு மாரத்தா சமூகத்தினர் மீண்டும் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

மகாராஷ்டிராவின் பூர்வக்குடிகளாக மாரத்தா சமூகத்தினர் உள்ளனர். இவர்கள் வசதிப்படைத்தவர்களாகவும், அரசு துறைகளில் அதிகளவில் பணி செய்பவர்களாவும், நிலக்கிழார்களாகவும் உள்ளனர்.
குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமுறை முதல்வராக பொறுப்பு வகித்த சமுதாயம் என்றால் அது இவர்கள் தான். இந்த சமூதாயத்தை சேர்ந்த சுமார் 10க்கும் அதிகமானவர்கள் மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பு வகித்துள்ளனர். இப்படி தனி செல்வாக்குடன் இருந்த இவர்கள் விவசாயம் உள்பட தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சமூக, கல்வி ரீதியாக பின் தங்கி வருவதாக நினைக்கின்றனர்.
இதனால் கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு கோரி வருகின்றனர். இதனை ஏற்று கடந்த 2018 ல் மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதற்கு உச்சநீதிமன்றம் தடை போட்டது. இந்நிலையில் தான் தற்போது மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரி மாரத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் இடஒதுக்கீடு கோரி மாரத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள் நேற்று இரவு முதல் பீட் மாவட்டத்தில் போராட்டம், உண்ணாவிரதம் நடத்தினர். அப்போது பஸஅகள் மற்றும் அரசு வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இன்று காலையில் பல இடங்களில் தீவைப்பு சம்பவங்கள், கல்வீச்சு நடந்தது. மேலும் பீட் நகரில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களான சந்தீப் கிஷிர் சாகர் (சரத்பவார் அணி), பிரகாஷ் சோலங்கி (அஜித் பவார் அணி)மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெய்தத் கிஷிர்சாகர் உள்ளிட்டவர்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் பீட் மாவட்டத்தில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பீட் மாவட்ட கலெக்டர் தீபா முதோல் முண்டே கூறுகையில், ‛‛பீட் நகரில் தொடர் வன்முறை மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவின்படி இந்த ஊரடங்கு என்பது பீட் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள 5 கிலோமீட்டர் பகுதிக்குள்ளும், தாலுகாவின் தலைமை அலுவலகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமலில் இருக்கும்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications