நிச்சயதார்த்தத்திற்கு அம்பானி வீட்டு மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்த ஆடையின் விலை தெரியுமா?
மும்பை: உலக பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ராதிகாவின் ஆடைகள், ஆபரணங்களின் விலை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ளவர் முகேஷ் அம்பானி. இன்டர்நேஷனல் கோடீஸ்வரர்களுக்கு இணையாக இவர் வளர்ந்து வருகிறார். ஆசியாவில் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் இவர் ஆவார்.
இவருடைய மனைவி நீடா அம்பானி. இவர்களுக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற மகன்களும் ஈஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். ஆகாஷும் ஈஷாவும் இரட்டை பிறவிகள். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்கள் அண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்கள்.

ராதிகா மெர்ச்சன்ட்
இந்த நிலையில் ஏற்கெனவே ராதிகா மெர்ச்சன்ட் ஒரு பில்லியனரை காதலித்து வருகிறார்கள் என்ற தகவல்களை ஆங்கில ஊடகங்கள் அவ்வப்போது வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் இருவீட்டாரும் பேசி இவர்களது திருமணத்தை முடிவு செய்துவிட்டனர். வரும் மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெறுகிறது.

ஆனந்த் அம்பானி
ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு அக்ஷய் குமார் , ஐஸ்வர்யா ராய் முதல் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். மருமகள் ராதிகாவை ஆரத்தி எடுத்து வரவேற்றார் நீடா அம்பானி. இந்த நிலையில் மணமகள் ராதிகா அணிந்திருந்த உடையின் மீதுதான் எல்லோரின் பார்வையும் இருந்தது.

நிச்சயதார்த்த விழா
நிச்சயதார்த்தத்திற்கு முன்பு நடந்த மெஹந்தி விழாவில் இளம்சிவப்பு நிறத்தில் ராதிகா அணிந்திருந்த ஆடையில் கண்ணாடி வேலைப்பாடுகள் இருந்தன. இந்த ஆடையின் விலை ரூ 5 லட்சமாம். அதுபோல் நிச்சயதார்த்தத்தில் தங்க நிறத்தில் லெஹெங்கா அணிந்திருந்தார். அதற்கு மேட்சிங்காக தோடு, பெல்ட், வளையல்கள் ஆகியவற்றை அணிந்திருந்தார்.

வைரக்கற்கள்
அவர் வைரக்கற்கள் பதித்த நெக்லஸ் அணிந்திருந்தார். இவரது உடையை வடிவமைப்பது அபுஜானி சந்தீப் கோஸ்லா ஆவார். தனது நண்பர்களுக்கு ராதிகா பார்ட்டி கொடுத்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஃபுளோரல் ஆடை டோல்ஸ் அண்ட் கபனா பிராண்ட்டை சேர்ந்தது. அந்த ஆடையின் விலை ரூ 3 லட்சம் என தெரிகிறது. அது போல் அவர் வைத்திருந்த ஜுடித் லெய்பர் வாட்டர்மெலன் பாப்சிகல் கிளட்ச் நிறுவனத்தின் பர்ஸ் அட்டகாசமாக இருந்தது. அதன் விலை ரூ 3.4 லட்சம் ஆகும்.

ஆடை விலை குறைவுதான்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆர்மன் ஜெயின் மற்றும் அனிசா மல்ஹோத்ரா ஆகியோரின் திருமண விழாவில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த ஐவரி நிற லெஹெங்கா ரூ 4.1 லட்சமாகும். இந்த ஆடையை ராகுல் மிஸ்ரா வடிவமைத்தார். மெஹந்தி விழா, நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த விழாவில் அணிந்திருந்த ஆடையை காட்டிலும் குறைந்த விலையிலான ஆடையையே தனது நிச்சயதார்த்ததில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications