அசரடிக்கும் ஆண்டு வருமானம்.. இந்தியாவின் பணக்கார கிராமம் எது தெரியுமா? விவசாயம் தான் பிரதான தொழில்
மும்பை: இந்தியாவின் பணக்கார கிராமம் எது என்று உங்களுக்கு தெரியுமா? அந்த கிராமம் எங்கு உள்ளது? விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் அந்த கிராம மக்களின் ஆண்டு வருமானம் என்னவென்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பணம்.. ‛தேசப்பிதா’ காந்தி போட்டோவுடன் உலா வரும் இந்த மதிப்பு மிக்க தாள் இன்றி இன்று உலகில் எதுவும் நடக்காது என்ற நிலை உருவாகி உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயமும் பணத்தை சார்ந்தே தான் உள்ளது. இதனால் தான் நாம் சொந்த தொழில், வேலை செய்து பணம் சம்பாதித்து வருகிறோம்.

இதன்மூலம் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாவும் பலரும் மாறி வருகின்றனர். நம்மை பொறுத்தவரை உலகில் பெரும் பணக்காரர்கள், ஆசியாவின் பெரும் பணக்காரர்கள், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் குறித்த விபரத்தை நாம் அறிந்து வைத்திருப்போம். ஆனால் இந்தியாவில் உள்ள பணக்கார கிராமம் எது என்று உங்களுக்கு தெரியுமா? அந்த கிராமத்தின் ஆண்டு வருமானம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் ஹிவ்ரே பஜார் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் தான் இந்தியாவிலேயே பணக்கார கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 305 குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்த மக்கள்தொகை 1,250 ஆகும். மக்கள்தொகை குறைவாக இருக்கிறதே? அப்படியென்றால் எப்படி பணக்கார கிராமம் என்று கேட்கிறீர்களா?. அதற்கு பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.
குடும்பத்தினர் இறந்தால் கைவிரலை வெட்டிக்கொள்ளும் பெண்கள்! ஏன் இப்படி செய்றாங்க? பின்னணியில் ஷாக்
அதாவது கிராமத்தில் வசிப்போரில் 80 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மேலும் 50 குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றன. இதுதான் அந்த ஹிவ்ரே பஜார் கிராமத்தை பணக்கார கிராமம் என்று அழைக்க முக்கிய காரணமாம். இந்த கிராம மக்கள் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்களே? என்ன தொழில் செய்கின்றனர்? என்று கேட்டால் நீங்கள் இன்னும் ஆச்சரிப்படுவீர்கள். ஏனென்றால் அந்த கிராம மக்களின் பிரதான தொழில் என்பது விவசாயம் தான். இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை தான் செய்து வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகளவிலான காய்கறிகளை பயிரிட்டு லாபம் ஈட்டி வருகின்றனர். ஹிவ்ரே பஜார் கிராமத்தின் தனிநபர் வருமானம் என்பது நாட்டின் முதல் 10 இடங்களில் உள்ள கிராமங்களின் சராசரி மாத வருமான ரூ.890யை விட இரண்டு மடங்கு அதிகமாம். கடந்த 20 ஆண்டுகளில் கிராம மக்களின் சராசரி வருமானம் என்பது 20 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
விருந்தாளிகளுடன் உடலுறவு.. மனைவிகளை விருந்தாக்கும் கணவன்கள்.. யார் இவர்கள்? ஏன் இப்படி செய்கின்றனர்?
தற்போது இந்தியாவின் பணக்கார கிராமமாக பெயர் பெற்றுள்ள ஹிவ்ரே பஜார் ஒரு காலத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த. 1980, 1990 காலங்களில் இந்த கிராமம் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமையால் தவித்தனர். 1990 காலக்கட்டத்தில் கிராமத்தின் 90 சதவீத குடுமம்பங்கள் ஏழைகளாக இருந்தனர். இதனால் கிராமத்தில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு பிழைப்பு தேடி சென்றனர்.
இந்த காலம் தான் அந்த மக்களை மாற்றி யோசிக்க வைத்தது. அதாவது வறட்சியில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் அனைவரும் இணைந்து கூட்டு வன மேலாண்மை குழுவை உருவாக்கினர். இந்த குழு கிணறு தோண்டுவது, மரங்களை நடும் பணியை கிராமத்தில் தொடங்கினர். அதோடு வறட்சியின் பிடியில் சிக்கிய கிராமத்தில் விவசாயம் செய்து முன்னேறுவது பற்றி சிந்தித்தனர். கிராமத்தில் அதிக தண்ணீரை உறிஞ்சும் பயிர்களை விவசாயம் செய்ய வேண்டாம் என அதற்கு தடை விதித்தனர். குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் கொடுக்கும் பயிர்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய தொடங்கினர்.
இது கிராம மக்களுக்கு கைக்கொடுத்தது. மேலும் அனைவரும் சேர்ந்து கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட கிணறுகளை வெட்டியிருந்தனர். அதன்பிறகு கிணற்று பாசனம் மூலம் தொடர்ந்து விவசாயம் செய்து முன்னேற்றமடைந்துள்ளனர். தற்போது விவசாயம் நன்கு கைக்கொடுப்பதால் ஹிவ்ரே பஜார் மக்கள் நகரங்கள் நோக்கி புலம்பெயர்வதை கைவிட்டுள்னர். மேலும் இதற்கு முன்பு நகரங்களுக்கு சென்றவர்களும் கிராமத்துக்கு திரும்பி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கூட தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த கிராமம் குறித்து பேசி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கிராம மக்களின் தண்ணீர் தேவையை உணர்ந்து பயிர் செய்யும் முறையை மாற்றி வளர்ச்சி கண்டுள்ளதை எடுத்துரைத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications