மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்ய சொன்ன மகாராஷ்டிரா அமைச்சருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்
மும்பை: மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்ய உத்தரவிட்ட மகாராஷ்டிரா அமைச்சர் அனில் பரப்புக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர்சிங், அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மீது பரபரப்பான புகாரை கூறியிருந்தார். மும்பையில் உள்ள ஹோட்டல்கள், மதுபான விடுதிகளிடம் இருந்து மாதம் ரூ100 கோடி லஞ்சம் வசூலித்து தர சொன்னார் அனில் தேஷ்முக் என்பதுதான் அந்த புகார்.

பதவி இழந்த அமைச்சர்
இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலேயே பரம்வீர் சிங் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றார் அனில் தேஷ்முக். இந்த விவகாரத்தில் அனில் தேஷ்முக் பதவி இழந்தார்.

அனில் பரப்புக்கு சம்மன்
இது தொடர்பான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனில்தேஷ் முக் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அப்போது அனில்தேஷ்முக் மீது கருப்பு பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இந்த வழக்கில்தான் சிவசேனா மூத்த தலைவரும் போக்குவரத்து துறை அமைச்சருமான அனில் பரப் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நாராயண் ரானே கைது விவகாரம்
அமைச்சர் அனில் பரப் அண்மையில் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று சொன்ன மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை உடனே கைது செய்ய சொல்லி ரத்னகிரி போலீசாருக்கு அனில் பரப் உத்தரவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இதனையடுத்து மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிவசேனா சாடல்
இந்நிலையில் அமைச்சர் அனில் பரப்புக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில், எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் ஆசீர்வாத பேரணி முடிந்த கையோடு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்திய அரசு தன் வேலையை காட்ட தொடங்கிவிட்டது. இந்த விவகாரத்தின் தொடக்கப் புள்ளி ரத்னகிரி சம்பவம்தான். இதை சிவசேனா சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என பதிவிட்டிருந்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications