"பாரத ரத்னா கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.. சாவர்க்கரை அவமதிக்காதீர்கள்".. பட்னாவிஸ் வேண்டுகோள்
மும்பை: "சுதந்திரப் போராட்ட தியாகி வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் அவரை தரக்குறைவாகவும், அவமதிக்கும் விதமாகவும் யாரும் பேசாதீர்கள்" என்று மகாராஷ்ட்ரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபகாலமாக, சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
"உண்மை என்னவென்று தெரியாமல் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை கோழை என்றும், ஆங்கிலேயர்களின் ஆதரவாளர் எனக் கூறுவதும் மன்னிக்க முடியாது தவறு" எனவும் பட்னாவிஸ் கூறியுள்ளார்.

பாஜகவின் 'சாவர்க்கர் அரசியல்'
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, சில இந்துத்துவா தலைவர்களை மக்களின் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்படுத்த அக்கட்சியினர் முற்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் விநாயக் தாமோதர் சாவர்க்கர். சுதந்திரப் போராட்டத்தில் இவரது பங்கு அளப்பரியது என பாஜக கூறி வந்தது. ஆனால், "பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதங்களை எழுதி விடுதலையானவர்தான் சாவர்க்கர்" என எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் விமர்சித்து வருகின்றன. எனினும், சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட தியாகியாக பாஜக தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகிறது. அதே அளவுக்கு, சாவர்க்கரை எதிர்க்கட்சிகளும், பொதுமக்களில் ஒருதரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ராகுல் காந்தியும் விமர்சனம்
சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாவர்க்கரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். மகாராஷ்ட்ராவில் பாரத் ஜோடோ யாத்திரையின் ஒருபகுதியாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கடிதங்களை அடுக்கடுக்காக எழுதிக்கொடுத்து விடுதலையானவர்தான் சாவர்க்கர். தனது ஆயுட்காலம் வரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து ஓய்வூதியம் பெற்றும் காலத்தை தள்ளிய ஒருவரை வீரர் எனக் கூறுவது எவ்வகையில் நியாயம்?" என ராகுல் கேள்வியெழுப்பினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சை பாஜகவும், பல வலதுசாரி அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன.

தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி
இந்த சூழலில், மகாராஷ்ட்ரா சட்டமன்றக் கூட்டத்தின் போது இந்த விவகாரத்தை அம்மாநில துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் மிகப்பெரிய தலைவர்கள் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார்கள் என சிவசேனா (உத்தவ் அணி) எம்எல்ஏ பராப் சாகேப் கூறுகிறார். ஆனால், வீர சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசியது குறித்து இதுவரை நீங்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறீர்களா? என்றைக்காவது சாவர்க்கரை முன்னுதாரணமாக வைத்து நீங்கள் பேசியிருக்கிறீர்களா? நாட்டின் தலைவர்கள் பட்டியலில் சாவர்க்கர் வர மாட்டாரா?

பாரத ரத்னா விருது..
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகன் சாவர்க்கரை ஒரு மன்னிப்பு போராளி என்று ராகுல் காந்தி கூறினாரே.. அப்போது பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சியாவது அதை எதிர்த்தீர்களா? வீர சாவர்க்கர் நம் நாட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக அவர் பாரத ரத்னா விருது பெறாவிட்டால் கூட பரவாயில்லை. அவரை தரக்குறைவாகவும், அவமதிக்கும் விதமாகவும் யாரும் பேசாதீர்கள்" என தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications