கர்சீப்பால் துடைத்து கொண்டே.. "லைட்டையாவது நிறுத்துங்க".. பரிதாப பாடகர் கே.கே.. உடல் தகனம் இன்று
பாடகர் கேகேவின் உடல் இன்று மதியம் தகனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மும்பை: மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கேகேவின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.. இதனிடையே கேகேவின் மரணம் குறித்த சர்ச்சைகளும், அது தொடர்பான விசாரணைகளும் சூடுபிடித்து வருகின்றன.
கொல்கத்தாவில் நஸ்ருல் மான்ச்சில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாடிவிட்டு ரூமுக்கு சென்றபோது, மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளது.
Recommended Video
இயற்கைக்கு மாறான மரணம் என்று கொல்கத்தா போலீசாரும் வழக்கு பதிவு செய்திருந்ததை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டி உள்ளது.

சுயநினைவு
கேகே இறப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்புவரை, அப்போது பங்கேற்றிருந்த நிகழ்ச்சி பற்றின போட்டோக்களை எல்லாம் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்... அந்த அளவுக்கு சுயநினைவும், இயல்பாகவும் இருந்தவர் எப்படி இறந்திருக்ககூடும் என்ற வினாக்களை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.. இதனிடையே, கேகே இறந்ததுமே அவரது கடைசி வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவியது.. இசை நிகழ்ச்சி நடைபெற்ற அந்த ஹால், திறந்தவெளியில் இல்லை என்றும், அங்கு ஏசி சரியாக வேலைசெய்யவில்லை என்றும் தெரிகிறது.

ஹால்
2 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த ஹாலில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது.. இதனால், அதிலும் அந்த ஹால் மூடப்பட்டிருந்ததாக தெரிகிறது.. இதில் ஏசியும் வேலை செய்யவில்லை.. பொதுவாக, வெப்பப் பக்கவாதம் மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அது சில சமயம், வயதானவர்களுக்கு மாரடைப்பில் கொண்டு போய் விட்டுவிடுமாம்.. அப்படித்தான் ஏசி இல்லாமல் கேகே அவதிப்பட்டுள்ளார்.. தொடர்ந்து ஏசியை ஆன் செய்யுமாறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேகே வலியுறுத்தி வந்ததும் அந்த கடைசி வீடியோவில் பதிவாகி இருந்தது.

கர்சீப்பால் துடைக்கிறார்
இதுதொடர்பாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர் பதிவு ஒன்று போட்டுள்ளார்.. அதில், "நஸ்ருல் மான்சாவில் ஏசி வேலை செய்யவில்லை,, கேகேவுக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்ததால் அதுகுறித்து புகாரும் சென்னார்.. அது திறந்தவெளி ஹாலும் கிடையாது.. அதிக பணம் செலுத்தி ஒரு இடத்தை பதிவுசெய்யும்போது அங்குள்ள அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்பதையாவது அவர்கள் உறுதிசெய்யவேண்டும். அந்த வீடியோவை கவனித்தால் ஒன்று தெரியும்.. அவருக்கு எப்படி வியர்க்கிறது? அவர் தொடர்ந்து கர்சீப்பால் எப்படி துடைத்துக்கொண்டே இருக்கிறார் பாருங்கள்.

லைட்டுகள்
அவர் தொடர்ந்து ஏசியை ஆன் செய்ய கேட்டுக்கொண்டே இருந்தது மட்டுமின்றி, சில லைட்டுகளையாவது அணைக்கச்சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தார்.. மக்கள் நுழைவாயில் கதவை உடைத்துக்கொண்டு பாஸ் இல்லாமலே உள்ளே வந்து கொண்டே இருந்தனர். அப்போதும் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பாதுகாவலர்கள் எங்கே சென்றார்கள்? கொல்கத்தாவின் வெப்பநிலையை கருத்தில்கொள்ளுங்கள். அவ்வளவு கூட்டநெரிசலுக்கு மத்தியில் ஏசியும் வேலைசெய்யவில்லை.. இவைகளுக்கு நடுவே குரலை உயர்த்தி பாடினால் நிலைமை என்னவாகும்? அந்த மாரடைப்பு சாதாரணமாக நடந்த ஒன்று இல்லை" என்கிறார்.

வியர்த்து கொட்டியது
எனினும், கேகேவிற்கு ஹிஸ்டோடாக்ஸிக் ஹைபோக்ஸியா அல்லது மூச்சுத்திணறலால்கூட மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்.. அதுமட்டுமல்ல, கூட்டம் நிரம்பிவழிந்த அந்த ஹாலில், சிலர் தீயணைப்பானை அடித்துள்ளதாக தெரிகிறது.. கூட்டத்தில், தீயணைப்பானை அடித்தால் அது மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிரையே எடுத்துவிடுமாம்.. மேடையிலேயே வியர்த்து வியர்த்து கொட்டியும் அவரை ஏன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை? ஏன் ஹோட்டல் ரூமுக்கு அழைத்து சென்றார்கள் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உடல் தகனம்
அந்த வகையில், கேகேவின் மரண சர்ச்சை வெடித்து வருகிறது. இதனிடையே, கே.கே-வின் உடல் கொல்கத்தா ஏர்போர்ட்டில் இருந்து நேற்று மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.. மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கேகே வின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.. தொடர்ந்து கேகேவின் மரணம் தொடர்பான விசாரணையை போலீசார் கையில் எடுத்துவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications