இன்னும் 5 வருசம் தான்.. இந்தியாவில் பெட்ரோலுக்கு தேவையே இருக்காது.. நிதின் கட்கரி பூரிப்பு!
மும்பை: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிதின் கட்கரி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகன பயன்பாடு, பெட்ரோல் - டீசல் பொருட்களின் எதிர்கால தேவை எப்படி இருக்கும் என்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அதில், இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் - டீசல் பொருட்களுக்கான தேவை இருக்காது. இதனைத்தொடர்ந்து நாட்டில் எரிபொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பெட்ரோலுக்கான மாற்று
இதனால் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பயோ எத்தனால் பயன்படுத்தப்படும் என்று கூறினார். ஏற்கனவே மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பயோ எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் பயோ எத்தனால் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

விவசாயிகள் பற்றி கட்கரி
இதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஆழ்துளை கிணற்று நீரில் இருந்து க்ரீன் ஹைட்ரஜன் தயாரித்து ரூ.70க்கு விற்பனை செய்யும் நிலை வரும். அதோடு விவசாயிகள் இனி உணவை மட்டும் வழங்குபவர்களாக மட்டும் இல்லாமல், இனி வரும் காலங்களில் எரிசக்தி வழங்குபவர்களாகவும் மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சத்தீஸ்கர் முன்னிலை
அண்மையில், சத்தீஸ்கர் அரசு 2022ம் ஆண்டுக்கான எலெக்ட்ரிக் வாகன கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தை மின்சார வாகனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து உபகரணங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும், மாநில மின்சார வாகன பயன்பாடும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications