மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கான முழு ஊரடங்கு அமல்.. அங்கு 200 நாட்களுக்கு தடுப்பூசி தேவையாம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில்15 நாட்களுக்கு முழு ஊரடங்குக்கு இணையாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

உள்ளூர் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பல்க்குகள், ஹோட்டல் / உணவகங்களில் பார்சல் மட்டும் மற்றும் வீட்டு விநியோக உணவு நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

அத்தியாவசிய சேவைகளைச் செய்யாத அனைத்து கடைகள், மால்கள், ஷாப்பிங் சென்டர்கள் மே 1 ஆம் தேதி வரை மூடப்படும்.

மகாராஷ்டிராவில் அதிகம்

மகாராஷ்டிராவில் அதிகம்

இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிராவில்தான் கொரோனா தொற்று மிக மிக அதிகமாக உள்ளது. அங்கு தினமும் 50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மாநிலத்தின் மும்பை, புனே போன்ற நகரங்களில் தினசரி பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்குக்கு இணையாக 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஸ், ரயில் இயங்கும்

பஸ், ரயில் இயங்கும்

இந்த நாட்களில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மட்டுமே இயங்கும். உள்ளூர் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இயங்கும். பெட்ரோல் பல்க்குகள், செபியுடன் தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பான நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஹோட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து மால்களும் மூடல்

அனைத்து மால்களும் மூடல்

அனைத்து வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தனியார் பயிற்சி வகுப்புகள், முடிதிருத்தும் கடைகள், ஸ்பாக்கள், வரவேற்புரைகள் மற்றும் பியூட்டி பார்லஸ் ஆகியவை மூடப்பட்டுள்ளது. சினிமா அரங்குகள், தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், ஜிம்கள், விளையாட்டு வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

தடுப்பூசி மிக முக்கியம்

தடுப்பூசி மிக முக்கியம்

15 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் அரசு பிறப்பித்த உத்தரவுகளை மக்கள், நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்க படுகின்றனவா என்பதை அறிய மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம், வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிராவுக்கு 200 நாட்கள் தடுப்பூசிகள் தேவை என்று தெரியவந்துள்ளது. ''அடுத்த இரண்டு மாதங்களில் குறைந்தது 2 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டால், அது நிச்சயமாக மகாராஷ்டிராவுக்கு உதவும், அதே நேரத்தில் தடுப்பூசிகளை தாமதப்படுத்தினால் அது பெரிதும் உதவாது" என்று மகாராஷ்டிரா கொரோனா தடுப்பு பணிக்குழுவின் தொழில்நுட்ப ஆலோசகர் டாக்டர் சுபாஷ் சலுங்கே கூறினார்.

200 நாட்களுக்கு தடுப்பூசி தேவை

200 நாட்களுக்கு தடுப்பூசி தேவை

45-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு நிர்வகிக்கப்படும் சராசரி இரட்டை அளவுகளின் அடிப்படையில் கணக்கீடு, ஒவ்வொரு நாளும் சராசரியாக 1.65 லட்சம் பேருக்கு அரசு தடுப்பூசி போடுவதைக் காட்டுகிறது. இதன் பொருள் அடுத்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 1 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பதாகும். 45-59 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட இன்னும் 78 நாட்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய தடுப்பூசி விகித கணக்கீட்டின்படி 25-44 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட 200 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+