விடாத கொரோனா பரவல்.. இந்தியா உள்பட உலக நாடுகளில் மொத்தம் 57.80 கோடி பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 578,003,88 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 64,09,821 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூகானில் 2019ல் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. அங்கிருந்து பல நாடுகளும் இந்த வைரஸ் பரவியது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் பெரும் பாதிப்பை சந்தித்தது.

In World 57.80 Crore People affected by Covid 19

கொரோனா பாதிப்புக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. 3 அலைகளாக கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கி ஏராளமானவர்களை கொன்று குவித்துள்ளது.

இதனால் இந்தியா உள்பட உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்த துவங்கியது. மேலும் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளும் துவங்கியது. இதையடுத்து தான் கொரோனா பாதிப்பு குறைய துவங்கியது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தாக்க துவங்கியது. கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை.

இதற்கிடையே தான் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் என்பது குறைந்துள்ளது. இருப்பினும் முடிவு பெறவில்லை.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் 576,832,260 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை இன்று 578,003,881 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை நேற்று 6,406,914 ஆக இருந்த நிலையில் இன்று6,409,821 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நேற்று 546,754,575 ஆக இருந்த நிலையில் இன்று 547,753,370 ஆக அதிரித்துள்ளது.

மேலும் இன்றைய நிலவரப்படி உலகில் மொத்தம் 23,840,697 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் தனிமையில் உள்ளவர்களும் அடங்குவர். இவர்களில் 4,892 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+