மும்பையில் 3-வது மீட்டிங்.. ‘இந்தியா’ கூட்டணியில் டமால்? பாஜக திரியை பற்ற வைப்பதாக சரத்பவார் புகார்!
மும்பை: "இந்தியா" கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டத்துக்குள் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக அணிக்கு இழுத்து செல்வதற்கான முயற்சிகள் படுஜோராக நடைபெறுவதை அக்கட்சியின் தலைவர் சரத்பவாரே பகிரங்கமாக தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் உருவாக்கியது "இந்தியா" கூட்டணி இதுவரை பெரும்பாலான பந்துகளை சிக்சர்களாகவே அடித்து வருகிறது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் பாட்னாவிலும் 2-வது கூட்டம் கர்நாடகாவின் பெங்களூர் நகரிலும் நடைபெற்றது.

நாடாளுமன்றம்: இந்தியா கூட்டணியானது மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கியது. அத்துடன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து சரித்திரம் படைத்தது. இதன் மூலம் நாடாளுமன்றத்துக்கு வராமல் இருந்த பிரதமர் மோடியை வரவழைத்தது இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம். இத்தீர்மானத்தின் மீது லோக்சபாவில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தலா 2 மணிநேரம் விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர்.
3-வது ஆலோசனை கூட்டம்: இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சரத்பவாரின் ரகசிய சந்திப்பு: இந்நிலையில் "இந்தியா" கூட்டணியின் பிரதான கட்சிகளில் ஒன்றான சரத்பவார் தலைமையிலான என்சிபியை முழுமையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சிகளை பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை பெங்களூர் கூட்டத்தின் போதே, திடீரென அதிருப்தி கோஷ்டியின் அஜித் பவார் உள்ளிட்டோர் சரத்பவாரை மும்பையில் சந்தித்து பேசினார். இதனால் பெங்களூர் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்பாரா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் 2-ம் நாள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்றார்.
மீண்டும் ரகசிய சந்திப்புகள்: இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் சரத்பவார் பங்கேற்றது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போதும் அஜித்பவாருடன் சரத்பவார் ரகசிய ஆலோசனை நடத்தியிருப்பது தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆனாலும் அஜித்பவார் தமது அண்ணன் மகன்; அதனால் நீண்டநேரம் சந்தித்து பேசியதாக சரத்பவார் தரப்பு சொல்கிறது.
என்ன நடக்கும்?: அதேநேரத்தில், என்சிபியை முழுமையாக பாஜக பக்கம் இழுப்பதற்காக பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்பதையும் சரத்பவார் பகிரங்கப்படுத்தி இருக்கிறார். நாகாலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு என்சிபி ஆதரவு தருகிறது. நாகாலாந்து மாநில என்சிபி எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் அஜித்பவார் கோஷ்டியில் இணைந்துள்ளனர். இதனை முன்னுதாரணமாகக் காட்டியே ஒட்டுமொத்த என்சிபியையும் பாஜக அணிக்குள் இழுத்துவிட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மும்பையில் இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்குள் என்சிபியை மொத்தமாக கூட்டணிக்குள் பாஜக இழுத்துவிடும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications