மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான்கில் எதுவும் நடக்கும்.. மிக முக்கியமான 24 மணி நேரம்.. மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!

மகாராஷ்டிராவில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 முக்கியமான அரசியல் திருப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசமா?.. பாஜகவுக்கு கபில் சிபல் நறுக்

    மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 முக்கியமான அரசியல் திருப்பங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் அங்கு அரசியல் தலைவர்கள் களநிலவரத்தை மிக கவனமாக கவனித்து வருகிறார்கள்.

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக அங்கு மீண்டும் பாஜக கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கிறது.

    நேற்று முதல்நாள் அதிகாலை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்தார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

    இப்போது அல்ல.. 2 மாதத்திற்கு முன்பே 'பிளான் பி' போட்ட அமித் ஷா.. அஜித்தை சிக்க வைத்தது இப்படித்தான் இப்போது அல்ல.. 2 மாதத்திற்கு முன்பே 'பிளான் பி' போட்ட அமித் ஷா.. அஜித்தை சிக்க வைத்தது இப்படித்தான்

    தீர்ப்பு

    தீர்ப்பு

    மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவிற்கு நவம்பர் 30ம் தேதி ஆளுநர் பகத் சிங் நேரம் கொடுத்தார். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் நேற்றும், இன்றும் விசாரணை நடந்தது.இந்த நிலையில் நாளை இந்த வழக்கில் காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    சிவசேனா எம்எல்ஏக்கள்

    சிவசேனா எம்எல்ஏக்கள்

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் பின்வரும் நான்கு விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதன்பின் முதற்கட்டமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக எப்படியாவது இழுக்க நினைக்கும். தேசியவாத காங்கிரஸ் 53 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. ஆனால் இதில் எல்லோரும் தற்போது சரத் பவார் உடன் இல்லை.

    4 பேர்

    4 பேர்

    தற்போது அஜித் பவாருடன் சேர்த்து 4 பேர் அஜித் பவாருடன் இருக்கிறார்கள். இன்னும் சிலர் அஜித் பவாருடன் போனில் தொடர்பில் இருக்கிறார்கள். இதேபோல் இன்னும் பலரை அஜித் பவார் பக்கம் இழுக்க வைத்து. புதிய அணி உருவாக்கி, ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் இதற்கான முயற்சிகள் நடக்கும் என்கிறார்கள்.

    இரண்டு என்ன

    இரண்டு என்ன

    இரண்டாவதாக பாஜக கட்சி சிவசேனா எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. சிவசேனாவின் 17 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அணி தாவலாம் என்று செய்திகள் வந்தது. இவர்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக முயன்று வருகிறது.

    மூன்றாவது திட்டம்

    மூன்றாவது திட்டம்

    அதேபோல் இன்னொரு மூன்றாவது அதிர்ச்சியும் மகாராஷ்டிராவில் நடக்க வாய்ப்புள்ளது. அஜித் பவாரை தேசியவாத காங்கிரஸ் மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது . அஜித் பவார் ஒருவேளை மனம் மாறி மீண்டும் சரத் பவார் உடன் இணைய வாய்ப்புள்ளது. அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பாஜகவிற்கு கடைசி நேரத்தில் ஷாக் கொடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    ஆட்சி கவிழும்

    ஆட்சி கவிழும்

    கடைசியாக பாஜக நாளை வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கும். அதற்குள் போதுமான எம்எல்ஏக்களை இழுக்க முடியவில்லை என்றால், கர்நாடகாவில் கடந்த வருடம் எடியூரப்பா பதவி விலகியது போல பட்னாவிஸ் பதவி விலக வாய்ப்புள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பட்னாவிஸ் பதவி விலக வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த நான்கு விஷயங்கள் நாளை இரவிற்குள் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    English summary
    Maharashtra: 4 Major twists may happen in state politics in the next 24 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X