தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி.. 2 வது இடத்தில் சிவசேனா
மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவில் தான் உள்ளது. இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் தாராவி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜெய்க்வாட் ஜோதி ஏக்நாத் 23 ஆயிரத்து 459 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தாராவி தொகுதியில் முதல் முறையாக வென்றிருந்தாலும் கூட கெய்க்வாட் ஜோதி ஏக்நாத்தின் குடும்பத்துக்கும் இந்த தொகுதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது? அதுபற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி சட்டசபை தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இங்கு மொத்தம் 19 சுற்றுகளில் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலையில் முதலில் தபால் ஓட்டுகளும், அதன் பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது.
இன்று மதியம் 12 மணிக்கு 13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் கெய்க்வாட் ஜோதி ஏக்நாத் முன்னிலையில் இருந்தார். அவர் மொத்தம் 46,852 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
மேலும் அவரை எதிர்த்து களமிறங்கி உள்ள சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) வேட்பாளர் ராஜேஷ் சிவதாஸ் காந்தர் 31,508 ஓட்டுகள் பெற்று பின்தங்கியிருந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் என்பது 15,344 ஆக இருந்தது. இதற்கு அடுத்தப்படியாக பகுஜன் சமாஜ் கட்சியின் மனோகர் கேதாரி ராய்பாக் 4,545 ஓட்டுகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார்.
இறுதியாக இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கெய்க்வாட் ஜோதி ஏக்நாத் 23,459 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 70,727 ஓட்டுகள் பெற்றார். சிவசேனா ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த ராஜேஷ் சிவதாஸ் காந்தர் 47,268 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மனோஜகர் கேதாரி ராய்பாக் 6,196 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பிடித்தார்.
தற்போது முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கெய்க்வாட் ஜோதி ஏக்நாத் பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் தான் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கடந்த 1999 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். 1999ல் ஏக்நாத் கெய்க்வாட் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2004, 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் ஏக்நாத் கெய்க்வாட்டின் மூத்த மகள் வர்ஷா கெய்க்வாட் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது அவர் வடக்கு மத்திய மும்பை எம்பியாக உள்ளார். இதனால் ஏக்நாத் கெய்க்வாட்டின் இளைய மகளும், வர்ஷா கெய்க்வாட்டின் தங்கையுமான ஜோதி ஏக்நாத் இந்த முறை தாராவில் போட்டியிட்டார். தற்போது அவர் முன்னிலை பெற்றுள்ளார். தாராவி என்பது ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாகும். இங்கு ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக தமிழர்கள் அதிகமானவர்கள் தாராவியில் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கும் மாற்றும் திட்டத்தை கடந்த 2,000 ஆண்டு முதல் ஒவ்வொரு அரசும் அறிவித்து அதற்கான டெண்டர் விடுகின்றன. ஏதாவது ஒரு காரணத்தால் அது ரத்தாகி வருகிறது. கடைசியாக பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானவுடன் முதல் பணியாக தாராவிக்கு டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டரை அதானியின் நிறுவனம் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கு எடுத்தது. இதில் வெளிப்படை தன்மை இல்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. மேலும் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் டெண்டர் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அறிவித்தது. ஆனால் தற்போது மகாராஜ்டிராவில் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. மீண்டும் பாஜக கூட்டணி அரியணை ஏறுகிறது. இதனால் இந்த முறையாவது தாராவி மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கிடைக்குமா? என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ஒன்இந்தியா தமிழுக்கு மும்பையில் ஜோதி கெய்க்வாட் அளித்த சிறப்பு பேட்டியை இதில் பார்க்கலாம்..
இதில் மேல் கூறிய லிங்கை கிளிக் செய்யும் வகையில் எம்பட் செய்யவும்












Click it and Unblock the Notifications