பசங்க கிரிக்கெட் விளையாட போறாங்களா? பெற்றோர்களே கவனம்! ‘அந்த’ இடத்தில் பந்து..நொடியில் பிரிந்த உயிர்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கோடை விடுமுறையின் போது நண்பர்களோடு கிரிக்கெட் விளையாண்ட சிறுவனின் பிறப்புறுப்பில் பந்து பலமாக தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பள்ளி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்.. ஆனால் அவர்களை கண்காணிக்கும் பெற்றோர்களின் பாடு படுத்திண்டாட்டம்..

வீட்டில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் எப்போது என்ன செய்து வைப்பார்கள் என தெரியாமல் பெற்றோர்கள் குழம்பி தவிப்பதே வழக்கமாகி போய்விட்டது. இதனை பல வீடுகளிலும் நாம் பார்க்க முடியும்.
அதிர்ச்சி சம்பவம்: அதே நேரத்தில் பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் குழந்தைகளை பார்த்துக் கொள்வது மிக அவசியம். தற்போது நிறைய நீர்நிலைகளில் குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவங்களும் விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. எனவே குழந்தைகளை முழுக்க முழுக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழே பெற்றோர்கள் வைக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லை என்றால் மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறது ஒரு சம்பவம்.
நண்பர்களுடன் கிரிக்கெட்: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹேகான் பகுதியில் கடந்த வாரம் 11 வயது சிறுவன் கிரிக்கெட் பந்து பிறப்புறுப்பில் பலமாக தாக்கியதில் இறந்துள்ளார். சம்பு காளிதாஸ் கான்ட்வேர் என்ற சவுரியா கோடை விடுமுறையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அதுவே அந்தச் சிறுவனின் கடைசி நாள் என்பது அவரது நண்பர்களுக்கு தெரியாது.
பிறப்புறுப்பில் பந்து: வழக்கம் போல் சவுரியா பேட்ஸ்மேனுக்கு வந்து வீசிக்கொண்டிருந்தார். அதை ஆடிய பேட்ஸ்மேன் அதிவேகமாக ஸ்ட்ரைக் அடித்த நிலையில் எதிர்பாராத விதமாக அந்த பந்து அதிவேகத்தில் நேரடியாக சவுரியாவின் பிறப்புறுப்பில் தாக்கியது. இதனால் வேதனையில் துடித்த சவுரியா அங்கேயே மயங்கி சரிந்தான். உடன் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த சிறுவனுக்கு உதவ முயன்றனர். ஆனாலும் சிறுவன் சுய நினைவின்றி இருந்ததை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவனை மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனாலும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
சிறுவன் மரணம்: மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக விமான நிலைய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். விளையாட்டு என்றால் கூட அது பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்பதை சற்று அழுத்தமாக உணர்த்தி உள்ளது இந்த சம்பவம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications