மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மும்பையில் உச்சமடையும் கொரோனா... ஒரு வாரத்தில் 306 கட்டிடங்களுக்கு சீல்.. விரைவில் லாக்டவுன்

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா பாதிப்பு மும்பையில் மீண்டும் உச்சமடைந்துள்ள நிலையில், நகர் முழுவதும் உள்ள 306 கட்டிடங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும், குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் கொரோன பாதிப்பு வேமகெடுத்துள்ளது.

தஞ்சையில் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா- பள்ளிகளுக்கு அதிரடி அபராதம் விதிப்பு தஞ்சையில் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா- பள்ளிகளுக்கு அதிரடி அபராதம் விதிப்பு

இதன் காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தொடர்ந்து விதித்து வருகிறது. இருப்பினும், கொரோனா வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்பதால் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

குறிப்பாக மராட்டியத்தில் நிலைமை நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. 2020ஆம் ஆண்டில் புதிய உச்சமாக அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,000 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் மும்பையில் 13,912 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் உச்சம்

மும்பையில் உச்சம்

மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சத்திலிருந்து கொரோனா பரவல் பின், மெல்லக் குறைந்து வந்தது. கடந்த மூன்று நாட்களாக 1000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு, இம்மாத தொடக்கம் முதல் மீண்டும் 2,000-3000 எனப் பதிவாகி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் 30 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கட்டிடங்களுக்குச் சீல்

கட்டிடங்களுக்குச் சீல்

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றுக்குச் சீல் வைக்கும் நடவடிக்கைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். மும்பையில் 34 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல 305 கட்டிடங்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

புதிய கட்டுப்பாடுகள்

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார துறை, காவல் உள்ளிட்ட அத்தியாவசிய அலுவலர்களைத் தவிர மற்றவை 50% ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் உள்ள மால்களில் நுழைய கொரோனா நேகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மீண்டும் லாக்டவுன்

மீண்டும் லாக்டவுன்

அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆனால், கடந்த முறையைப் போலவே கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்த முறையும் மக்கள் ஒத்துழைப்பு அளப்பார்கள் என நம்புகிறோம் என்றார். மேலும், தடுப்பூசிகளால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்றும் பொதுமக்கள் தடுப்பூசிகளைத் தானாக முன்வந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

English summary
New restrictions implemented in Maharashtra as Corona surge
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X