மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி vs காங்கிரஸ் கூட்டணி.. 'போல் ஆப் போல்ஸ்' எக்ஸிட் போல் முடிவுகள் என்ன?
மும்பை: மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்ததையடுத்து எக்ஸிட்போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் பாஜக கூட்டணியே வெற்றி பெறும் என கணிப்புகள் கூறி வருகின்றன. ஆனாலும் காங்கிரஸ் கூட்டணி வலுவான போட்டியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. போல் ஆப் போல்ஸ் கணிப்பில் பாஜக கூட்டணி 144 முதல் 164 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்துக்கு அடுத்தப்படியாக அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. இங்கு தற்போது பாஜக, சிவசேனா(ஷிண்டே அணி), என்சிபி (அஜித் பவார்) கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இந்த சட்டசபையின் பதவி காலம் வரும் நவம்பர் 26-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ந் தேதி (அதாவது இன்று) சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணி யும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
அதேநேரம் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, , தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி என பல தலைவர்கள் மகாராஷ்டிராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இந்தநிலையில் 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்களில் பலரும் காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்தனர். எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற முழு விவரம் இன்னமும் வெளியாகவில்லை. வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 996 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில் மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அப்போது தான் யார் வென்றார்கள் என்பது தெரியவரும்.
எனினும் தேர்தல் முடிந்த பின்னர் பொதுவாக எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவருவது வழக்கம். அந்த வகையில் மகாராஷ்டிரா தேர்தல் முடிந்த நிலையில் இன்று எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பெரும்பாலான கணிப்புகள் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளன. எனினும் காங்கிரஸ் கூட்டணியும் கணிசமாக வெல்லும் என்பதை கணிப்புகள் கூறியுள்ளன. அந்த வகையில் போல் ஆப் போல் எக்ஸிட் போல் கணிப்புகளின் படி, பாஜக கூட்டணி 144-164 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 118-138 இடங்களிலும் வெல்லும் என்றும் மற்ற கட்சிகள் ஆறு முதல் 10 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications