மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிராவில் 5 லெவல்களாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்.. தளர்வுகள் என்னென்ன?

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று முதல் முழு ஊரடங்கில் மாவட்டங்கள் 5 கட்டங்களாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மக்களுக்கும் வணிகர்களுக்கும் சற்று நிம்மதியை தரும் வகையில் உள்ளது.

மகாராஷ்டிராவில் முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் கொரோனா பரவல் அதிகமாகவே இருந்தது. மற்ற மாநிலங்களில் முதலிடத்தில் இருந்தது மகாராஷ்டிரா.

Maharashtra five-level unlock begins today: Check whats allowed

இந்த மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் இங்கு தினசரி கேஸ்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து கொரோனா உறுதியானவர்களின் சதவீதம் மற்றும் மாவட்டங்கள், நகரங்களில் காலியாக உள்ள ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து மகாராஷ்டிராவில் 5ஆவது கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டன.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாசிட்டிவிட்டி ரேட்டையும் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை சதவீதத்தையும் அளித்து வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மாவட்டங்களை 5 கட்டங்களாகப் பிரித்து தளர்வுகளை அறிவித்தனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் மராத்தா ஜாதி... மகாராஷ்டிரா அரசு அதிரடி பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் மராத்தா ஜாதி... மகாராஷ்டிரா அரசு அதிரடி

முதல் லெவலில் பாசிட்டிவிட்டி ரேட் 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். ஆக்ஸிஜன் படுக்கை பயன்படுத்தும் நிலை 25 சதவீதமாக இருக்க வேண்டும். 2ஆவது லெவலில் பாசிட்டிவிட்டி ரேட் 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். ஆக்ஸினேட்டட் படுக்கை வசதிகள் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இருக்க வேண்டும்.

லெவல் 3 - பாசிட்டிவிட்டி ரேட் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருக்க வேண்டும். ஆக்ஸிஜன் படுக்கை பயன்பாடு சதவீதம் 40 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். லெவல் 4 - பாசிட்டிவிட்டி ரேட் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இருக்க வேண்டும். ஆக்ஸிஜன் படுக்கை பயன்பாடு சதவீதம் 60 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

லெவல் 5 - பாசிட்டிவிட்டி ரேட் 20 சதவீதத்திற்கு மேல் வரை இருக்க வேண்டும். ஆக்ஸிஜன் படுக்கை பயன்பாடு சதவீதம் 75 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். லெவல் 1-இல் அவுரங்கபாத், பாந்த்ரா, புல்தானா, சந்திரபூர், தூலே, கட்சிரோலி, கோண்டியா, ஜல்கான், ஜால்னா, லத்தூர், நாக்பூர், நந்தெத், நாசிக், பர்பாணி, தானே, வாஷிம், வார்தா, யாவட்மால் ஆகிய மாவட்டங்கள் வரும்

இரண்டாவது லெவலில் நவி மும்பையும் தானே வரும் வருகிறது. முக்கிய நகரமான மும்பை 3ஆவது லெவலில் வருகிறது. முதல் இரு லெவல்களின் கீழ் உள்ள மாவட்டங்களில் கடைகள் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும். லெவல் 3 மற்றும் 4-இல் கடைகள் 4 மணிக்கு மேல் மூடியிருக்க வேண்டும்.

லெவல் 5-ன் கீழ் உள்ள மாவட்டங்களில் வார நாட்களில் 4 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் கடைகள் மூடப்பட வேண்டும். முதல் லெவலில் மால்கள், தியேட்டர்கள், மல்டிபிளஸ்க் திரையரங்குகள் வழக்கம் போல் இயங்கலாம். ஆனால் லெவல் 2 ன் கீழ் வரும் மாவட்டங்களில் 50 சதவீத நபர்களுடன் இயங்கலாம்.

இவையெல்லாம் மற்ற 3 லெவல்களின் கீழ் வரும் மாவட்டங்களில் மூடியிருக்க வேண்டும். அது போல் முதல் லெவலின் கீழ் வரும் மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு எந்த தடையும் இல்லை.

English summary
Maharastra five level unlock begins today. Here are list of what is allowed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X