ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை.. பள்ளி ஆசிரியரை போலீசில் சிக்க வைத்த 6 மாணவிகள்! அப்படிப்போடு
மும்பை: மகாராஷ்டிராவில் செல்போனில் ஆபாச வீடியோ காட்டி 6 மாணவிகளுக்கு தொடர்ந்து 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர் தொல்லையால் நொந்துப்போன மாணவிகள் கொஞ்சம் மாற்றி யோசித்து சரியான திட்டமிட்டு அவரை போலீசில் சிக்க வைத்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய பெண் பயிற்சி டாக்டருக்கு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று மும்பை பட்லாபூர் பள்ளியில் 3 வயது மற்றும் 4 வயது நிரம்பிய தூய்மை பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அவரை மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் பெரிய அளவில் போராட்டம் நடந்தது.
இந்த துயர சம்பவங்களின் வடு இன்னும் மறையாத நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காண்பித்து 4 மாதங்கள் வரை ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் நடந்துள்ளது.
மிஸ்ஸே ஆகாது.. கொல்கத்தா டாக்டர் கொலையில் சிபிஐ இறக்கிய 2 பெண் சிங்கங்கள்.. யார் இந்த மீனா + சீமா?
அகோலா மாவட்டம் காஷிகேட் பகுதியில் ஜில்லா பரிஷத் அரசு பள்ளி உள்ளது. இங்கு பிரமோத் சர்தார் (வயது 47) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் மாணவிகளும் படித்து வருகிறார். இந்நிலையில் தான் பிரமோத் சர்தார் மாணவிகளுக்கு தனது செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக அவர் 6 மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
மேலும் சம்பவம் குறித்து வெளியில் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். பள்ளியில் தேர்வில் தோல்வியடைய வைப்பதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவிகள் சம்பவம் பற்றி வெளியில் கூறவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஆசிரியர் பிரமோத் சர்தார் தொடர்ந்து மாணவிகளுக்கு தொல்லை அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது தொல்லை அதிகரித்துள்ளது.
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை.. மூடி மறைக்க மம்தா அரசு செய்த 10 தவறுகள்! அதிர வைக்கும் தகவல்
இதனால் ஒரு மாணவி சம்பவம் குறித்து குழந்தைகள் நல மையத்துக்கு போன் செய்து தங்களுக்கு நேர்ந்த துயரம் பற்றி புகார் அளித்தார். இதையடுத்து குழந்தைகள் நல மையத்தினர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிரமோத் சர்தார் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து 6 மாணவிகள் சார்பில் ஊரல் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் பிரமோத் சர்தாரை அதிரடியாக கைது செய்தனர். கைதான ஆசிரியர் பிரமோத் சர்தாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.












Click it and Unblock the Notifications