பால் தாக்கரே நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பட்னாவிஸ்.. கோஷமிட்ட சிவசேனாவினர்.. பெரும் பரபரப்பு!
மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவிற்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தும் போது, சிவசேனா கட்சியினர் அவருக்கு எதிராக கோஷமும் எழுப்பினார்கள்.
மும்பை: மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவிற்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தும் போது, சிவசேனா கட்சியினர் அவருக்கு எதிராக கோஷமும் எழுப்பினார்கள். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை.
அங்கு பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்று இரண்டாவது முறையாக அறிவித்துவிட்டது. அங்கு தற்போது சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பாஜக சிவசேனா இடையே பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது.

மொத்தமாக உடைந்துள்ளது
இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக இவர்களின் கூட்டணி மொத்தமாக உடைந்துள்ளது. சிவசேனா நாளை லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர இருக்கிறது. கடந்த வாரம் பேட்டி அளித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், பால் தாக்கரேவை, சிவசேனா அவமானப்படுத்தியது என்று கூறினார்.

பட்னாவிஸ் எப்படி
இந்த நிலையில் இன்று பட்னாவிஸ் பால் தாக்கரேவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இன்று பால் தாக்கரேவின் 7வது வருட நினைவு அஞ்சலி. இதனால் மும்பையில் உள்ள அவரின் நினைவிடத்தில் சிவசேனா மற்றும் பாஜக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காலையில் அங்கு அஞ்சலி செலுத்தினார்.

தலைவர்
அதேபோல் பாஜகவின் மூத்த தலைவர் பட்னாவிஸ் பால் தாக்கரேவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். எங்களுக்கு பால் தாக்கரே மீதான மரியாதை எப்போதும் போல இருக்கிறது. சிவசேனாதான் எங்களுடன் சண்டை போட்டு பிரிந்துவிட்டது என்று பட்னாவிஸ் தெரிவித்தார்.
|
கோஷங்களை எழுப்பினார்கள்
அப்போது அங்கு கூடி இருந்த பாஜக தொண்டர்கள், பட்னாவிஸுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சிதான். பட்னாவிஸ் கனவு பலிக்காது, பட்னாவிஸ் முதலை கண்ணீர் விட வேண்டியதுதான் என்று பல கோஷங்களை எழுப்பினார்கள்.

உடனே வெளியேறினார்
இந்த சம்பவத்தால் அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்னாவிஸ் உடனடியாக வெளியேறினார். இதனால் சிவசேனாவுடன் பாஜகவின் உறவு மேலும் முறிந்துள்ளது. பட்னாவிஸுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் இப்படி கோஷம் எழுப்பும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications