மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவமனை தீ விபத்தில் 13 பேர் பலி: 'இது ஒன்றும் தேசிய செய்தி அல்ல'.. நிருபரிடம் சீறிய அமைச்சர்!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்து தேசிய செய்தி அல்ல என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் விரார் நகரில் வசை என்ற இடத்தில் உள்ள விஜய் வல்லப் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

 Maharashtra Health Minister Rajesh Tope has said Not national news on Virar hospital tragedy

இந்த கோர விபத்தில் கொரோனா நோயாளிகள் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அங்கு இருந்த கொரோனா நோயாளிகள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஏசி எந்திரம் வெடித்து தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணை கூறுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபுடன், ' மகாராஷ்டிரா தீ விபத்து குறித்து பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

"அய்யோ".. தொப்பென்று.. நடுரோட்டில் விழுந்த பிணம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ!

Recommended Video

    கொரோனா சிகிச்சை மையத்தில் கோரம்: ஐசியூவில் தீ விபத்து… 13 பேர் பரிதாப பலி!

    அதற்கு பதிலளித்த ராஜேஷ் டோப், ' மகாராஷ்டிரா தீ விபத்து தேசிய செய்தி அல்ல. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் தடுப்பூசி பற்றி நாங்கள் விவாதிப்போம். தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசே அனைத்து உதவிகளையும் வழங்கும்'' என்று தெரிவித்தார்.

    English summary
    State Health Minister Rajesh Dob's statement that the Maharashtra hospital fire was not national news caused a stir
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X