மகாராஷ்டிரா சட்டசபை சிறப்புக் கூட்டம் தொடக்கம்- புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்புக் கூட்டத் தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்று வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். இதனையடுத்து சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா ஆகாஸ் விகாதி எனும் கூட்டணியானது ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரின.

Maharashtra: MLAs to take oath at special assembly session today

இதனையடுத்து மகா ஆகாஸ் விகாதியின் தலைவரான உத்தவ் தாக்கரேவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். மும்பை சிவாஜி பூங்காவில் நாளை மாலை உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இதனிடையே பாஜகவின் காளிதாஸ் கொலம்பகரை தற்காலிக சபாநாயகராக நியமித்திருந்தார் ஆளுநர் கோஷ்யாரி. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது.

Maharashtra: MLAs to take oath at special assembly session today

இக் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் காளிதாஸ் கொலம்பகர் பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முன்னதாக ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்த பின்னர் நள்ளிரவில் என்சிபி தலைவர் சரத்பவார் வீட்டில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட மகா ஆகாஸ் விகாதி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+