Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவை விடாத சிவசேனா.. ஒரே குடைச்சல்.. மகாராஷ்டிராவில் பரபரக்கும் தேர்தல் அரசியல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் ஆளும் சிவசேனா கட்சியின் கூட்டணி செயல்பட்டு வருகிறது. ஜூன் 10ல் நடந்த ராஜ்யசபா தேர்தலை தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் எம்எல்சி தேர்தலிலும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்த கூட்டணிக்கு மகா விகாஷ் அகடி என பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு பாஜக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. காலம் காலமாக பாஜகவுடன் வைத்திருந்த கூட்டணியை சிவசேனா கடந்த சட்டசபை தேர்தலில் முறித்து கொண்டது.

தொடரும் வார்த்தை போர்

தொடரும் வார்த்தை போர்

இதையடுத்து பாஜக, சிவசேனா இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மத்திய பாஜக அரசு மூலம் இது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக இந்த விஷயத்தில் பாஜக, சிவசேனா இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.

ராஜ்யசபா தேர்தல்

ராஜ்யசபா தேர்தல்

இது சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலிலும் எதிரொலித்தது. மகாராஷ்டிராவில் 6 ராஜ்யசபா இடங்களுக்க ஜூன் 10ல் தேர்தல் நடந்தது. ஒவ்வொரு கட்சியில் உள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடம், பாஜகவிற்கு 2 இடம் கிடைப்பது உறுதியாக இருந்தது. ஆனால் பாஜக 3 வேட்பாளர்களையும், சிவசேனா 2 வேட்பாளர்களையும் நிறுத்தியது. இறுதியில் சுயேச்சை எம்எல்ஏக்கள், பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜகவின் 3வது வேட்பாளர் தனஞ்செய் மகாத் வெற்றி பெற்றார். சிவசேனாவின் 2வது வேட்பாளர் சஞ்சய் பவார் தோல்வியடைந்தார்.

 மேல்சபை தேர்தலில் 10க்கு 11 பேர் போட்டி

மேல்சபை தேர்தலில் 10க்கு 11 பேர் போட்டி

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) தேர்தல் இன்று காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் தலா 2 வேட்பாளர்கள் என மொத்தம் 6 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 5 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதன்மூலம் 10 இடங்களுக்கு மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று எம்எல்சி தேர்தல்

இன்று எம்எல்சி தேர்தல்

இதில் கட்சிகளுக்கு இருக்கும் எம்எல்ஏக்களின் ஆதரவுக்கு ஏற்ப 9 பேரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிடும். 10வது இடத்துக்கு தான் ஆளும் கூட்டணி தரப்பில் களமிறங்கி உள்ள மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜாக்தாப் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவின் பிரசாத் லட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

285 பேருக்கு ஓட்டு

285 பேருக்கு ஓட்டு

ஒரு உறுப்பினர் வெற்றி பெற மொத்தம 26 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. மகாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியாக உள்ளது. மேலும் வாக்களிக்க ஒரு நாள் ஜாமீன் கோரிய அமைச்சர் நவாப் மாலிக் மற்றும் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் ஆகியோரின் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் மொத்தம் 285 பேர் ஓட்டளிக்க உள்ளனர்.

 கட்சி வாரியாக எம்எல்ஏக்கள்

கட்சி வாரியாக எம்எல்ஏக்கள்

இதில் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு 55 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 51 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்லெ்ஏக்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 29 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த எம்எல்ஏக்களின் ஓட்டுக்கள் தான் காங்கிரசின் 2வது வேட்பாளர் பாய் ஜாக்தாப் மற்றும் பாஜகவின் 5வது வேட்பாளர் பிரசாத் லட் ஆகியோரின் வெற்றியை உறுதி செய்ய உள்ளன.

ஏட்டிக்கு போட்டி; யார் கை ஓங்கபோகுது?

ஏட்டிக்கு போட்டி; யார் கை ஓங்கபோகுது?

எம்எல்ஏக்களிடம் பிற கட்சியினர் குதிரை பேரம் நடத்துவதை தவிர்க்க எம்எல்ஏக்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்று தேர்தல் என்பதால் அவர்கள் வந்து ஓட்டளித்து வருகின்றனர். இந்த தேர்தல் மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி-பாஜக இடையே தொடர்ந்து போட்டி நிலவி வருகிறது. இதனை தான் ராஜ்யசபா தேர்தல் மற்றும் தற்போதைய எம்எல்சி தேர்தல் நிலவரங்கள் காட்டுகின்றன. மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாஜகவின் கை ஓங்கி நிலையில் எம்எல்சி தேர்தலில் தங்களின் 6 வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் சிவசேனா, பாஜக, காங்கிரஸ் கூட்டணி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இன்று மாலை வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+