மகாராஷ்டிராவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா.. 10 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை.. 459 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையே 10,000 ஐ கடந்தது. மகாராஷ்டிராவில் மொத்தம் 10,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    உலகத்தை உலுக்கிய கொள்ளை நோய்கள்... இனியாவது மாறுவோமா?

    இந்திய மாநிலங்களிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா ருத்ர தாண்டவமாடுகிறது. அங்கு இன்று மட்டும் 583 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளி விவரப்படி இம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,498 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 459 ஆகவும் உள்ளது.

    Maharashtra’s Coronavirus tally inches towards 10,000 mark

    மகாராஷ்டிராவில் மும்பையில் மிக உக்கிரமான பாதிப்பு உள்ளது. மும்பையில் மட்டும் 7061 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்று மட்டும் மும்பையில் 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழர்கள் வாழும் தாராவி பகுதியும் அடங்கும்.

    மும்பையைத் தொடர்ந்து புனேவில் 1248 பேரும் தானேவில் 943 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பும் மரணங்களும் கிடுகிடுவென அதிகரித்த மாநிலம் குஜராத்.

    குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4395 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 214 ஆக அதிகரித்து 250ஐ தொடும் நிலையில் உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில்தான் மிக அதிகமாக 3026 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கு அடுத்ததாக குஜராத்தின் சூரத் நகரில் 614 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்கள் அளவில் 3-வது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 56 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+