வீடு புகுந்து 1 கோடி அபேஸ்.. கொள்ளை அடிக்க 'நல்ல நேரம்' குறித்து கொடுத்த ஜோதிடர்.. ஜெயில் பறவையானார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், ஒரு கோடி ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளை கும்பலுக்கு, கொள்ளையடிக்க 'நல்ல நேரம்' குறித்து கொடுத்த ஜோதிடர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பராமதியை சேர்ந்த சாகர் கோப்னே என்பவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி மட்டுமே தனியாக வசித்துள்ளார். அப்போது வீடு புகுந்த கொள்ள கும்பல், சாகர் கோப்னேவின் மனைவியை கட்டிப்போட்டனர்.

Maharastra : An astrologer arrested after gave a good time for robbery gangs to loot

சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். அத்துடுன் பணம் , நகை எங்கு உள்ளது என்று மிரட்டி தகவலை தெரிந்து கொண்டனர். பின்னர் அந்த பெண் சத்தம் போடாமல் இருக்க வாயை துணியால் கட்டினர்.

பின்னர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.95 லட்சம் ரொக்கத்தை எடுத்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் ஒரு வழியாக கட்டை அவிழ்த்து புனே மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்த வந்து மோப்ப நாய் வைத்து சோதித்தனர். அத்துடன் சிசிடிவி கேமராக்கள், அக்கம்பக்கம் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து ஆய்வு செய்தனர்.

தீவிர விசாரணை மற்றும் வாகன சோதனைக்கு பின்னர் கொள்ளை அடித்து சென்ற 5 பேரின் அடையாளம் போலீசாருக்கு தெரியவந்தது. சாகர் கோப்னேவின் மனைவியை கட்டிப்போட்டு கொள்ளையடித்தது சச்சின் ஜக்தானே, ராய்பா சவான், ரவீந்திர போசலே, துரியோதன், நிதின் மோரே ஆகியோர் தான் என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.76 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள பணம், நகை குறித்து விசாரித்து வருகிறார்கள்

இதனிடையே கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசாரையே திகைத்து போக வைக்கும் அளவிற்கு ஒரு தகவலை கொள்ளையர்கள் சொன்னார்கள். வீடு புகுந்து கொள்ளையடிக்க சுப நேரத்தை ஜோதிடர் ஒருவர் குறித்து கொடுத்ததும், அந்த ஜோதிடர் பெயர் ராம்சந்திரா சாவ்லா என்றும் போலீசாரிடம் போட்டுக்கொடுத்தனர்.

இதையடுத்து கொள்ளையர்களுக்கு நல்ல நேரம் குறித்து கொடுத்த ஜோதிடரை நேரடியாக சென்று தூக்கிய போலீசார், உண்மையா என்று தங்கள் பாணியில் விசாரித்தனர். அவரும் உண்மையை ஒப்புக்கொண்டதுடன், சிறையில் கம்பி எண்ணி வருகிறார். கொள்ளைய அடிக்க நல்ல நேரம் குறித்து கொடுத்த ஜோதிடர் இவர் ஒருவர் தான் கிண்டல் செய்யும் போலீசார், இப்போது அவருக்கு நேரம் சரியில்லை என்று கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+