Malegaon Blast: மாலேகான் குண்டு வெடிப்பு.. ஆதாராத்தை காட்ட தவறிய என்ஐஏ! பாஜக முன்னாள் எம்பி உட்பட அனைவரும் விடுதலை!
மும்பை: கடந்த 2008ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். இது தொடர்பான விசாரணை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பில் அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு, செப்டம்பர் 29ம் தேதியன்று இரவு மாலேகானில் உள்ள பிக்கு சௌக் அருகே பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள், வழக்கின் போக்கு போன்றவை நாடு முழுவதும் கடுமையான விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில் மும்பை சிறப்பு NIA நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்துத்துவா அமைப்பினர் கைது
முதலில் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையால்தான் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையின் அடிப்படையல், இந்து வலதுசாரி குழுக்களுடன் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பாஜக எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் அடங்குவர். இவர்கள் இருவரும் இந்த சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்ததோடு, பின்னர் ஜாமீன் பெற்றனர்.
விசாரணை
இந்த வழக்கு 2011 ஆம் ஆண்டில் என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது. அவர்கள் குற்றத்தை மீண்டும் பதிவு செய்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போதிருந்து, பல குற்றப்பத்திரிகைகள் மற்றும் துணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏழு குற்றவாளிகளுக்கு எதிராக முறையாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் 2018 இல் விசாரணை தொடங்கியது. விசாரணையின் போது, நீதிமன்றம் 323 அரசு தரப்பு சாட்சிகளையும் எட்டு தற்காப்பு சாட்சிகளையும் விசாரித்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
10,800 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட 400 க்கும் மேற்பட்ட பொருட்கள் உட்பட ஏராளமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. விசாரணையின் போது சுமார் 40 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர். அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு வாதங்கள் ஏப்ரல் 2025 இல் முடிவடைந்தன. அரசு வழக்கறிஞர் தரப்பு 1,300 பக்கங்களுக்கும் அதிகமான விரிவான எழுத்துப்பூர்வ வாதங்களை சட்ட மேற்கோள்கள் மற்றும் ஆவண ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது. இதனையடுத்து ஏப்ரல் 19 அன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மும்பை சிறப்பு NIA நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.கே. லஹோட்டி தீர்ப்பு வழங்கி உள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் தற்போது விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். வழக்கை விசாரித்த என்ஐஏ போதுமான ஆதாரங்களை காட்டவில்லை என்று சொல்லி, அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
குற்றச்சாட்டும் மறுப்பும்
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஏழு பேரில், சாத்வி பிரக்யா மற்றும் லெப்டினன்ட் கர்னல் புரோஹித் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள். சாத்வி பிரக்யா, கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார். இந்த குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் அவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அப்போதைய ராணுவ உளவுத்துறையில் பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் புரோஹித், அபினவ் பாரத் என்ற தீவிர இந்து அமைப்புக்கு தளவாட மற்றும் பொருள் உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணம் என்று மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை குற்றம் சாட்டியது. வெடிபொருட்களை ஏற்பாடு செய்வதற்கும், தாக்குதல்கள் திட்டமிடப்பட்ட கூட்டங்களில் பங்கேற்றதற்கும் புரோஹித் உதவியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications