”இந்தியா” கூட்டணி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே; ஒருங்கிணைப்பாளர் ரேஸில் நிதிஷ், ஸ்டாலின், மமதா!
மும்பை: "இந்தியா" கூட்டணியின் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாள பதவிக்கு நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

"இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக 60க்கும் மேற்பட்ட தலைவர்கள் மும்பையில் குவிந்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

மும்பையில் நேற்று முதல் "இந்தியா" கூட்டணி தலைவர்கள் திரண்டு வருவதால் மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. மும்பையில் இன்று இரவு முதல் நாளை வரை இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் தலைவர் பதவி, ஒருங்கிணைப்பாளர் பதவி யாருக்கு என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பெயர்தான் முதலில் அடிபட்டது. அதன் பின்னர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது பெயர்களும் அடிபட்டன. அதேநேரத்தில் தலைவர் பதவிக்கு சோனியா அல்லது ராகுல் காந்தி பெயர்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தற்போது "இந்தியா" கூட்டணி தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, பொதுவாக கூட்டணிகளில், ஒருங்கிணைப்பாளர் என்றாலே அதில் ஒருவர் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து உருவாகிவிடும். தற்போது மல்லிகார்ஜூன கார்கேவை தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளனர்; அதேபோல ஒருங்கிணைப்பாளராக மூன்று முதல்வர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications