• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இன்னொரு பெண்ணுடன் புருஷன்.. நடுரோட்டிலேயே "கோவை சரளா"வாக மாறிய மனைவி.. அடித்து நொறுக்கி.. செம வீடியோ

|

மும்பை: கணவனுடன் வேறு ஒரு பெண் இருப்பதை பார்த்துவிட்டார் மனைவி.. அவ்வளவுதான் நடுரோட்டிலேயே விஸ்வரூபமெடுத்துவிட்டார்! இது வீடியோவாகவும் வெளிவந்து சோஷியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது.

மும்பையில் பெண் ஒருவர் பெடர் சாலையில் காரை ஓட்டியபடி சென்று கொண்டிருந்தார்.. அப்போது தன்னுடைய கணவனின் கார் அதே ரோட்டில் செல்வதையும் பார்த்தார்.. ஆனால் அந்த காரில் இன்னொரு பெண் இருப்பதையும், கணவனுக்கு பக்கத்தில் அவர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

 mumbai couples fight on the road, video goes viral

இன்னொரு பெண்ணை காரில் உட்கார வைத்து செல்வதை மனைவி பார்த்துவிட்டார் என்பதை கணவனும் கவனித்து விட்டார்.. அதனால் காரை வேகம் எடுத்தார்.. மனைவியோ விடவில்லை.. பின்னாடியே அந்த காரை சேஸ் செய்து கொண்டு போனார்.. ஒருகட்டத்தில் அந்த காரை மடக்கி பிடித்தார்.

காருக்கு முன்னாடி சென்று நின்றும் கொண்டார்.. பரபரப்பு மிகுந்த சாலை அது.. டிராபிக் போலீசார்களே 2, 3 பேர் அந்த இடத்தில் நின்று, சீர் செய்யும் அளவுக்கு டிராபிக் ஜாம் ஆகும் பகுதி... ஆனால் ஏகப்பட்ட டென்ஷனில் இருந்த பெண், கணவரை காரை விட்டு வெளியே இறங்குமாறு கத்துகிறார்.. கதறுகிறார்.. காரையே ஆவேசத்துடன் சுற்றி சுற்றி வருகிறார்.. கையில் கிடைப்பதை எடுத்து கொண்டு, அந்த கார் மீது எறிகிறார்.

ஆனால், கணவனோ அசரவே இல்லை.. காரை விட்டு இறங்கவும் இல்லை.. அதற்குள் போக்குவரத்து பாதிக்கப்பட ஆரம்பித்துவிட்டது.. ஆனால் போலீசார் அதை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.. பெண்ணின் ஆத்திரத்தை கண்டு அருகில் யாரும் உடனே செல்லவில்லை.

அந்த பிஸி ரோட்டிலும், பெண்ணின் அலறலும், திட்டலும் கேட்கிறது.. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத மனைவி, காரின் முன் பகுதியில் ஏறி கொண்டார்... தன்னுடைய செருப்பை கொண்டு காரின் கண்ணாடியில் அடித்தார். 2 கார்களும் நடுரோட்டில் இருந்ததால் அங்கு தொடர்ந்து டிராபிக் ஜாம் ஏற்பட்டு கொண்டே இருந்தது.. கொஞ்ச நேரம் கழித்துதான், 2 பேரும் அவரவர் கார்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தினர்.

பிறகு கணவனை பார்த்ததும், மனைவி ஓடிச்சென்று கணவனை வெளியே இழுத்து போட்டு, நடுரோட்டிலேயே அடிக்க ஆரம்பித்தார்.. உடனே போலீசார் விரைந்து வந்து, 3 பேரையும் காம்தேவி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. டிராபிக் ஜாம் ஏற்படுத்தியதற்காக அந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தாலி கட்டிய கணவன், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை பார்த்ததும் தாங்கி கொள்ள முடியாத உச்சக்கட்ட வேதனையிலும், கோபத்திலும் இவ்வாறு மனைவி செய்துள்ளது தெரியவந்தது.

கருங்கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்... கிலோ ரூ.400-க்கு விற்ற கறி ரூ.900 வரை கிடுகிடு உயர்வு

நடுரோட்டில் நடந்த இந்த சண்டை காட்சியை யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் போட்டு விட்டார்கள்... இதுதான் தற்போது வைரலாகி வருகிறது.. இதற்கு பிறகு கணவன் நிலை என்ன ஆனது? வீட்டிற்கு போனாரா, இல்லையா? அவர் இப்போது எந்த கதியில் இருக்கிறார்? என்று நமக்கு தெரியவில்லை.

  Minister மகனை வெளுத்து வாங்கிய Woman Police | பழி வாங்கிய அமைச்சர்

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  mumbai couples fight on the road, video goes viral
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X