வேஷம் + சூனியம்.. "நான் ஆம்பளையே கிடையாது".. பெண்ணை ஏமாற்றி பலாத்காரம்.. நடுங்கி போன கோர்ட்
மும்பை: மும்பை ஹைகோர்ட்டில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்று மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான சமயங்களில் பயன்படுத்தப்படாத மிக முக்கியமான பிரிவு ஒன்றை பயன்படுத்தி இந்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி உள்ளனர்.
2018ல் நடந்த சம்பவம் ஒன்றில்தான் மும்பை நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. ஏப்ரல் 11, 2018 பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் தனது தோழியை பார்க்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் பாத்ரூமில் தோழி இருந்ததாக கூறப்படுகிறது. தோழி வெளியே வரும் அவர் வீட்டில் ஹாலில் காத்திருந்துள்ளார்.

சூனியம்
தோழிக்காக ஹாலில் காத்திருந்த அந்த பெண் சில நிமிடங்களில் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவரின் தோழியும், இன்னொரு பெண்ணும் பாத்ரூமில் இருந்து ஒன்றாக வெளியே வந்துள்ளனர். இவர்கள் இருவரும் உள்ளே பூஜை ஒன்றை நடத்தியதாகவும், அந்த இன்னொரு பெண் ஒரு சாமியார் என்றும் தெரிவித்துள்ளனர். இவரின் தோழிக்கு சாபம் இருந்ததால் அதை அகற்றுவதற்கான பூஜை செய்துவிட்டு வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இதை இவரும் நம்பி இருக்கிறார். உள்ளே பூஜை செய்த அந்த இன்னொரு பெண் பார்க்க கொஞ்சம் ஆண் போல இருந்ததும் அதை பற்றி இவர் விசாரித்து உள்ளார்.

திருநங்கை
அதற்கு அவர்.. நான் ஆண் இல்லை.. நான் ஒரு திருநங்கை. நான் இப்போது சாமியாராக இருக்கிறேன். பில்லி சூனியங்களை நீக்கி வருகிறேன். உன்னுடைய முகத்தை பார்த்தாலே தெரிகிறது. உனக்கு யாரோ சூனியம் வைத்து இருக்கிறார்கள். உன்னுடைய வாழ்க்கை இனி நன்றாக இருக்காது. நீ நன்றாக இருக்க வேண்டும் என்றால் சூனியத்தை நீக்க வேண்டும், என்று கூறியுள்ளார் அந்த திருநங்கை சாமியார். இதையடுத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறி அந்த பெண்ணின் வீட்டிற்கும் திருநங்கை சாமியார் சென்றுள்ளார்.

வழக்கு
அங்கே பூஜை எல்லாம் செய்து பாத்ரூமில் ஒன்றாக கால்களை கழுவ வேண்டும். அப்போதுதான் சூனியம் விலகும் என்று கூறி உள்ளே அழைத்து சென்றுள்ளார். அங்கேயே வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அந்த திருநங்கை சாமியார். அந்த பெண்ணை உள்ளேயே வைத்து வன்புணர்வும் செய்துள்ளார். பாத்ரூமில்தான் அந்த நபர் திருநங்கை போல நடித்துள்ளார். எல்லாம் வேடம். அவர் ஆண்தான். அவருக்கு இருக்கும் உணர்வுகள் எல்லாம் பெண்கள் மீதுதான். பெண்களை அடைய இப்படி வேஷம் போடுகிறார் என்பதை கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து அந்த போலி சாமியாரை அடித்து விரட்டி உள்ளார் அந்த பெண்.

தீர்ப்பு
ஆனால் ஒரு வாரம் கழித்து மீண்டும் அந்த போலி சாமியார் வீட்டிற்கு வரவே, போலீசில் புகார் அளித்துள்ளார் அந்த பெண். அந்த சாமியார் பெயர் நரசிம்ம பிச்சப்ப சிர்வாதி. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இத்தனை வருடமாக மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இதில்தான் அரிதாக பயன்படுத்தப்படும், சூனியத்திற்கு எதிரான Prevention & Eradication of Human Sacrifice & Other Inhuman Evil and Aghori Practices & Black Magic Act, சட்ட பிரிவின் கீழ் போலி சாமியார் நரசிம்மவிற்கு 1 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. மேலும் வன்புணர்வு வழக்கில் தனியாக 7 ஆண்டு இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications