தமிழர் வாழும் தாராவியில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை- 200ஐ தாண்டியது; 13 பேர் பலி
மும்பை: பல லட்சம் தமிழர்கள் வாழும் மும்பை தாராவியில் கொரோனாவின் பாதிப்பு உக்கிரமடைந்துள்ளது. தாராவியில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது. மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாரவிதான் பல லட்சம் தமிழர்களின் தாய்வீடு. குறுகிய வீடுகளுக்குள் குடித்தனம், பொதுக்கழிப்பிடங்களே துணை என்று வாழ்ந்த தாராவியை சொந்த தேசமாக கொண்டாடிய தமிழர்கள் உள்ளிட்டோர் இப்போது பெருந்துயரில் தவிக்கின்றனர்.

கொரோனாவைத் தடுக்க கடைபிடிக்க வேண்டிய தனிநபர் இடைவெளி என்பதை கிஞ்சித்தும் கடைபிடிக்கவே முடியாத நெரிசலான வாழ்விடப் பகுதி தாராவி. பல லட்சம் மக்கள் வசித்தாலும் நூறுகள் எண்ணிக்கையில்தான் பொது கழிப்பிடங்கள். இவைபோன்ற காரணங்களால் தாராவி மிகப் பெரும் இன்னலை சந்திக்கப் போகிறது என தொடக்கம் முதலே பலரும் எச்சரித்தனர்.
இப்போது தாராவியில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 200ஐ தாண்டியது. தாராவியில் உயிரிழந்திருப்போர் எண்ணிக்கை 13 ஆகவும் உயர்ந்துள்ளது.
லாக்டவுன் அமலில் உள்ளதால் அன்றாட வாழ்வாதாரம் எதுவும் இல்லாமல் பரிதாப நிலையில் உள்ளனர் தாராவி தமிழர்கள். தாங்கள் பிற சொந்த மண்ணுக்கு திரும்பவும் வழியில்லை என தத்தளிக்கின்றனர் இந்த தமிழர்கள்.
இதனிடையே மும்பை தாராவியில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணமே பொது கழிப்பிடங்கள்தான்; ஆகையால் புதிய கழிப்பிடங்களை இடைவெளியுடன் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புன்யா ஶ்ரீவத்சவா கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications