மும்பையில் கடற்படை கப்பலில் திடீர் வெடி விபத்து.. 3 வீரர்கள் பரிதாப பலி
மும்பை: மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெடிவிபத்து ஏற்பட்ட போது மும்மை கடற்படை தளத்தில் ரன்வீர் கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்பு தேவைக்காக வெடிபொருள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதில் திடீரென தீ பிடித்துள்ளது.
இதனால் மளமளவென வெடிபொருளில் தீ பரவி பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. வெடி பொருள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் பற்றி கேட்டதும் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டனர்.

ஆனாலும் தீ விபத்து ஏற்பட்ட கூடத்தில் சிக்கி இருந்த 3 பேர் அங்கேயே காயங்களுடன் மயக்கம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேரின் சடலங்களும் பெரும் போராட்டத்திற்கு பின்பே மீட்கப்பட்டது.
மூன்று பேர் பலியான நிலையில் அங்கே இருந்த கடற்படை கருவிகள் எதற்கும் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து உண்மையில் எதனால் ஏற்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.
வெடி விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இரவு 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications