Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

11 வயசு பெண்ணிடம் முத்தம் கேட்ட மிலிட்டரி ஆபீசர்.. நீதிபதி சொன்னதை பாருங்க! சபாஷ் குட் டச், பேட் டச்

Subscribe to Oneindia Tamil

மும்பை: 11 வயது பெண் குழந்தையிடம், ஒரு ராணுவ அதிகாரி முத்தம் கேட்டுள்ளார்.. தன்னை தாத்தா போல நினைத்துக் கொண்டு முத்தம் தர வேண்டும் என்றாராம்.. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் சபாஷ் உத்தரவு என்ன தெரியுமா?

பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், குட் டச், பேட் டச் என்பதுதான், பெண் குழந்தைகளுக்கு தேவையான மந்திர சொற்களாகும்.. பெண் குழந்தைகளுக்கு தொடுதல் தொடர்பான புரிதலை புரிய வைக்க வேண்டிய நிலைமை இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்பட்டுள்ளது.

Mumbai good touch bad touch high court

ஒரு குழந்தையின் நெஞ்சு பகுதி, இடுப்பு பின்புறம் மற்றும் கீழ் பகுதி, உதடு போன்றவற்றை தந்தை கூட தொடக்கூடாது என்பதை, உணர்த்த வேண்டியிருக்கிறது.. அப்படி யாராவது தொட முயற்சித்தாலோ, தொட்டாலோ உடனடியாக அம்மாவிடம் இதுகுறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்த வேண்டும்..

குட் டச், பேட் டச் அவசியம்

அதுமட்டுமல்லாமல், வயது வந்த பெண்களிடம் முகம் தெரியாத நபரோ, தெரிந்த நபர்களோ தேவையில்லாமல் பேசினாலோ, அதிகப்படியான உரிமை எடுத்தாலோ அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும்.. ஒருவேளை அதையும் மீறி தொந்தரவுகள் தொடர்ந்தால், தன்னுடைய கணவரிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ, பெற்றோரிடமோ கூறலாம். அவர்கள் மூலமாக மகளிர் போலீசில் புகார் அளிக்கவும் செய்யலாம்.

ஆனால், பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஆண் குழந்தைகளுக்கும் குட் டச், பேட் டச் என்பதை சொல்லிக்க கொடுக்க இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், தவறான நோக்கத்துடன் தொடப்படுவதை சரியாக புரிந்து கொண்ட ஒரு சிறுமிக்கு, நீதிமன்றமே பாராட்டு தெரிவித்திருக்கிறது. அத்துடன், சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அதிகாரிக்கு ஜெயில் தண்டனையையும் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.


சத்தம் போட்டு அப்பாவை வரவழைத்த சிறுமி

கடந்த மார்ச் 2021-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது.. லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்தில் உள்ள ராணுவ அதிகாரி, 11 வயது சிறுமியிடம் முத்தம் கேட்டுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, தன்னுடைய தந்தையிடம் புகார் சொல்லவும், இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றம் சென்றது..

இதையடுத்து, முன்னார் ராணுவ அதிகாரி போக்சோவில் கைதானதுடன், 5 வருடம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.. இதனால், இந்த உத்தரவை எதிர்த்து, மும்பை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. அதில், "எனக்கு எந்த தவறான நோக்கமும் இல்லை .. குழந்தையின் மீதுள்ள "தாத்தா/தந்தை போன்ற" அன்பினால் மட்டுமே சிறுமியைத் தொட்டு முத்தம் கேட்டேன்" என்று மனுவில் கூறியிருந்தார்.

லெப்டினென்ட் கர்னல்

இந்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவில் தன்னுடைய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: "லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்தில் உள்ள ராணுவ அதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றும் வீரர் ஒருவரின் குடும்பத்தாரை 2020ல் வரவழைத்து சந்தித்துள்ளார். அப்போது அந்த வீரர், வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது 11 வயது மகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

ஆனால் அந்த சிறுமிக்கு, "குட் டச், பேட் டச்" எனப்படும் எது நல்ல தொடுதல், தவறான தொடுதல் என்பது நன்றாக புரிந்து வைத்திருந்தார்.. எனவே, அந்த ராணுவ அதிகாரி, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதையடுத்து, உடனடியாக அவர் சத்தம் எழுப்பி தன்னுடைய தந்தையை வரவழைத்துள்ளார்..

தாத்தாவாக முத்தம் கேட்டாராம்

அதாவது, ஒரு தந்தையாக, தாத்தாவாகவே அந்த குழந்தையிடம் முத்தம் கேட்டதாக ராணுவ அதிகாரி கூறியுள்ளார். ஆனால், சிறுமியின் வாக்குமூலங்கள், அவரிடம் அந்த அதிகாரி தவறான நோக்கத்துடன் தொட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணுவ போலீஸ் மற்றும் ராணுவ நீதிமன்றங்களின் விசாரணைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை.

ஒரு தந்தையாக, தாத்தாவாகவே அந்த குழந்தையிடம் முத்தம் கேட்டதாக ராணுவ அதிகாரி கூறியுள்ளார். ஆனால், சிறுமியின் வாக்குமூலங்கள், அவரிடம் அந்த அதிகாரி தவறான நோக்கத்துடன் தொட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்கிறோம். தவறான தொடுதல் எது என்பதை சரியாக புரிந்து கொண்ட சிறுமிக்கு பாராட்டுகள்" என்று நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+