சொந்தக்காரர்களுக்கு போனை போட்ட அமோல்.. துடித்து பதறிய உறவினர்கள்.. மயூரி கிடந்த நிலை.. அதிர்ச்சி
மனைவி, குழந்தைகளை கொன்று ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்
மும்பை: "மயூரியை கொன்றுவிட்டேன்" என்று சொந்தக்காரர்களுக்கு போன் செய்து சொன்னார் கணவர் அமோல்.. இதையடுத்து உறவினர்கள் பதறி கொண்டு வந்து பார்த்தபோது, அமோல் உட்பட குடும்பமே இறந்து கிடந்ததை கண்டு அலறி துடித்தனர்.. இந்த சம்பவம் பெரும் மும்பையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப்.. 37 வயதாகிறது.. இவரது மனைவி மயூரி.. 27 வயதாகிறது.. இவர்களுக்கு ஆதித்யா, ஆயுஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் ஹோட்டல் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்துள்ளார்.. இதற்காக நிறைய கடனை வாங்கி, அந்த ஹோட்டலை டெவலப் செய்துள்ளார்.. ஆனால் எதிர்பார்த்தபடி ஓட்டல் லாபகரமாக செயல்படவில்லை.. வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார்.
இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டுவிட்டது.. அதனால் ஹோட்டலை திறக்க முடியாமல் மேலும் பண பிரச்சனையில் சிக்கி தவித்தார்.. மிகுந்த மன அழுத்தத்திற்கும் ஆளானார்.
இதையடுத்து, அமோல், வீட்டிலிருந்த மனைவி, மற்றும் 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்தார்.. இதில் அவர்கள் 3 பேரும் துடிதுடித்து இறந்துவிட்டனர்.. பிறக சொந்தக்காரர்களுக்கு போன் செய்து, "நான் மயூரி, குழந்தைகளை கொன்றுவிட்டேன்" என்று சொல்லி போனை கட் செய்து விட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்து, பதறி கொண்டு உறவினர்கள் வந்தனர்.. அப்போது, அமோலும் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அலறி துடித்தனர்.. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது நடத்திய விசாரணையில், கடன் தொல்லை காரணமாக இம்முடிவை அமோல் எடுத்தது தெரியவந்தது.
இந்த குடும்பத்தை அனைவருக்குமே பிடிக்குமாம்.. அழகான, அன்பான குடும்பம் இன்று மொத்தமாகவே உருக்குலைந்து அழிந்துவிட்டது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications