மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன் நாளை கரையை கடக்கும் நிசார்கா.. ரெட் அலர்ட்டில் மும்பை

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா கடலோரம் நிசார்கா புயல் நாளை கரையை கடப்பதால் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உச்ச கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    களை கட்டும் தென்மேற்கு பருவமழை | புயலால் மும்பையில் மழை

    தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு நிசார்கா என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த புயல் ஜூன் 3 ஆம் தேதி அதாவது நாளை கரையை கடக்கிறது. இது மகாராஷ்டிரா- குஜராத் மாநிலம் இடையே கரையை கடக்கும் என்றும் அந்த மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     தெற்கு நோக்கி வருகிறது.. தெற்கு நோக்கி வருகிறது.. "நிசார்கா" புயல் உருவானால் தமிழகத்தை தாக்குமா? எங்கெல்லாம் மழை பெய்யும்?

    பேரிடர் குழு

    பேரிடர் குழு

    இந்த புயலை எதிர்கொள்ள மகாராஷ்டிராவில் 9 தேசிய பேரிடர் மீட்புப் படை குவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 3 குழுக்களும் பால்காரில் இரு குழுக்களும், தானே, ரெய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் பகுதிகளில் தலா ஒரு பேரிடர் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

    வேகம்

    வேகம்

    இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிசார்கா என்பது ஒரு தீவிர புயலாகும். இந்த புயலால் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடலோர கிராமங்களில் இருக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மின் துண்டிப்பு

    மின் துண்டிப்பு

    இதனால் புயல் நேரத்தில் மின் துண்டிப்பு ஏற்படாததை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலால் ஒரு உயிரை கூட இழக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டங்கள்

    மாவட்டங்கள்

    இதையடுத்து மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் ரெட் அலர்ட் கண்காணிப்பில் உள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேரிடர் மேலாண்மை குழுவினருடன் தொடர்பில் இருந்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த புயல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Mumbai is on Red alert as Nisarga is going to cross the Maharastra and South Gujarat coasts tomorrow evening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X