"டிரஸை எல்லாம் கழட்டு.." 26 வயது பெண்ணிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி.. ரூ.1.7 லட்சம் பணமும் பறிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாகச் சொல்லி ரூ. 1.7 லட்சத்தை ஏமாற்றிப் பிடுங்கியுள்ளனர். மேலும், அந்த பெண்ணின் ஆடைகளைக் களைய வைத்தும் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த காலத்தில் டிஜிடில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலவித மோசடிகள் அரங்கேறி வருகிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விஷயத்தை வைத்து மோசடி செய்கிறார்கள்.

டிஜிட்டல் அரெஸ்ட்: அதுபோல இப்போது டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாகச் சொல்லி மிகப் பெரியளவில் மோசடி அரங்கேறி வருகிறது. இதுபோன்ற மோசடி கால்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசு தொடர்ந்து எச்சரித்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே உள்ளது. அப்படி தான் இங்கே மீண்டும் ஒரு மோசடி சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்த 26 வயது பெண்ணை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளனர். பண மோசடி குற்றச்சாட்டில் அந்த பெண்ணை கைது செய்துள்ளதாக மிரட்டி, வீடியோ காலில் கட்டாயப்படுத்தி ஆடைகளைக் கழற்ற வைத்துள்ளனர். மேலும், சுமார் ரூ. 1.7 லட்சத்தை ஏமாற்றிப் பிடுங்கியுள்ளனர். அதன் பின்னரே அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
மோசடி: மகாராஷ்டிரா மாநிலம் போரிவலி கிழக்கில் வசிக்கும் அந்த பெண், அங்குள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த நவ. 19ம் தேதி அந்த பெண்ணுக்கு முதலில் கால் வந்துள்ளது. டெல்லி போலீசார் என்று சொல்லிக் கொண்டு பேசத் தொடங்கி அந்த மோசடி பேர்வழிகள் பண மோசடி குற்றச்சாட்டில் இந்த பெண்ணின் பெயரும் அடிபட்டுள்ளதாகச் சொல்லியுள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், அவரது வழக்கு தொடர்பான பண மோசடி புகாரை விசாரிக்கும் போது தான் இந்த பெண்ணின் பெயரும் அதில் அடிபடுவதாகச் சொல்லியுள்ளனர். அந்த பெண் பயந்துவிடவே, இதுதான் சரியான வாய்ப்பு என்று அந்த பெண்ணை கைது செய்வதாக மிரட்டியுள்ளனர்.
அதன் பின்னரே அவர்கள் வீடியோ கால் செய்துள்ளனர். வீடியோ காலில் வந்த மோசடிக்காரர்கள் டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாகவும் தங்கள் அனுமதியின்றி யாருடனும் எதுவும் பேசக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். அந்த பெண்ணை ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்யச் சொல்லியுள்ளனர். அப்போது தான் வீடியோ காலில் விசாரணையைத் தொட முடியும் என சொல்லிக் கட்டாயப்படுத்தி ரூமை புக் செய்ய வைத்துள்ளனர்.
ஆடைகளைக் கழற்ற வைத்து: அந்த பெண் அருகே உள்ள ஹோட்டலுக்கு வந்தவுடன் மேலும் மிரட்ட ஆரம்பித்துள்ளனர். வங்கி கணக்குகளை செக் செய்ய வேண்டும் எனச் சொல்லி ரூ. 1.78 லட்சத்தை மிரட்டிப் பிடுங்கியுள்ளனர். மேலும், முழுமையாக செக் செய்ய வேண்டும் எனச் சொல்லி ஆடைகளையும் கட்டாயப்படுத்திக் கழற்றச் சொல்லியுள்ளனர். அவர்களுக்குப் பயந்து அந்த பெண்ணும் வேறு வழியின்றி ஆடைகளைக் கழற்றியுள்ளார். மேலும், அந்தத் தொகையையும் மோசடிக்காரர்களுக்கு மாற்றியுள்ளார்.
அதன் பிறகும் அவர்கள் மேலும் பணத்தைப் பறிக்கும் வகையிலேயே பேசியுள்ளனர். அப்போது தான் அந்த பெண்ணுக்குத் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கடந்த நவ. 28ம் தேதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பாரதிய நியாய சன்ஹித் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிஜிட்டல் அரெஸ்ட்: டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மோசடி நடப்பது தொடர்கதையாகி வருகிறது. முன்னதாக இதேபோல நரேஷ் கோயலின் பெயரைப் பயன்படுத்தி, வர்த்மான் ஜவுளி நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ பால் ஓஸ்வாலிடம் இருந்து ரூ. 7 கோடியை இதுபோல அவர்கள் மோசடி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்ய வேண்டும்: இந்திய சட்டப்படி யாரையும் டிஜிட்டல் முறையில் எல்லாம் கைது செய்யவே முடியாது. எனவே, உங்களுக்கு இதுபோல மோசடி கால் வந்தால் ஆதார், வங்கிக் கணக்குகளைப் பகிராதீர்கள். வீடியோ கால் வந்தாலும் எடுக்காதீர்கள்.. என்ன சொல்லி மிரட்டினாலும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்கள்.. அதன் பிறகு ஒரு வார்த்தை வராது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications