உத்தவ் தாக்கரேவுக்கு சோதனை மேல் சோதனை.. 32 மாஜி கவுன்சிலர்கள் ஏக்நாத் கோஷ்டியில் ஐக்கியம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிவசேனா கட்சியின் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மாநகராட்சி, நகராட்சி என உள்ளாட்சி பிரதிநிதிகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். நவி மும்பை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் 32 பேர், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கோஷ்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா அரசியலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பம்தான். இந்த திருப்பங்கள் அத்தனையும் உத்தவ் தாக்கரேவுக்கு பேரிடியாகத்தான் இருந்து வருகிறது.

New Set Back to Uddhav Thackeray: 32 Navi Mumbai corporators support to CM Eknath Shinde

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவவேனா எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதில் ஆட்சியைத்தான் முதலில் இழந்தார் உத்தவ் தாக்கரே. இப்போது ஒட்டுமொத்த சிவசேனாவுமே உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பறிபோகும் நிலைமை நெருங்கிவிட்டது.

சட்டசபையில் பெரும்பான்மை சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம்தான் உள்ளனர். சட்டசபையில் சபாநாயகர் தேர்தல், நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகியவற்றின் மூலம் இதனை ஏக்நாத் ஷிண்டே திட்டவட்டமாக நிரூபித்துவிட்டார். இதனையடுத்து லோக்சபா எம்.பி.க்கள் 18 பேரில் பெரும்பாலானோர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்க போவதாக செய்திகள் வெளியாகின. ஜனாதிபதி தேர்தலின் போது லோக்சபா விவகாரம் வெட்ட வெளிச்சமாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கொத்து கொத்தாக, கூட்டம் கூட்டமாக ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியில் இணைந்து வருகின்றனர். தானே மாநகராட்சியின் 67 சிவசேனா கவுன்சிலர்களில் 66 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நேற்று ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நவி மும்பை மாநகராட்சியின் 32 முன்னாள் கவுன்சிலர்கள், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+