மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

24 மணி நேரம் மட்டுமே கெடு.. திடீரென நாக்பூர் விரைந்தார் கட்கரி.. மகாராஷ்டிராவில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநரை சந்திக்கும் பாஜக.. அடுத்தடுத்த நகர்வுகளால் பரபரக்கும் அரசியல் களம்

    மும்பை: பாஜகவுக்கும் அதன் பங்காளியான சிவசேனாவுக்கு யார் முதல்வர் என்பதில் மோதல் நீடிக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பதற்கு ஒரு நாள் மட்டுமே கெடு உள்ளது. இந்த சூழ்நிலையில் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிடடு நாக்பூருக்கு பறந்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

    மகாராஷ்டிராவின் பாஜகவின் மூத்த தலைவரான நிதின் கட்கரி, பாஜகவின் கொள்கை வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்தை நாக்பூரில் சந்திப்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கட்கரி தனது திடீர் விமானத்தை உறுதிப்படுத்தியதோடு, "மகாராஷ்டிராவின் தற்போதைய நிலைமை" குறித்து நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்திப்பேன் என்று ஆங்கில ஊடகத்திடம் உறுதி தெரிவித்தார். இது ஒருபுறம் எனில் இன்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க உள்ளார்.

    எங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடுகிறது.. சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டுஎங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடுகிறது.. சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு

    சமரச திட்டம்

    சமரச திட்டம்

    சிவசேனா உடன் முட்டுக்கட்டையை தீர்க்க தேவைப்பட்டால் சமரச திட்டமாக கட்கரியின் பெயர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது. முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனா கட்சியின் கோரிக்கையை நிராகரித்த தேவேந்திர பட்னாவிஸ் மீது சிவசேனா கட்சி ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளது. இதனிடையே பட்னாவிஸ் கடந்த செவ்வாய்கிழமை இரவு மோகன் பாகவத்தை சந்துள்ளது இந்த சூழ்நிலையில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    மோகன் பகவத்

    மோகன் பகவத்

    அதேநேரம் சிவசேனா எம்பியும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத், தங்கள் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மோகன் பகவத் இடைடையே எந்த சந்திப்பும் நடக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    சிவசேனா கடும் தாக்கு

    சிவசேனா கடும் தாக்கு

    தேவேந்திர பட்னாவிஸை முதல்வர் பதவியை விட்டு போகப்போகிறவர் என்று குறிப்பிடும் சிவசேனா, அந்த அளவுக்கு கட்காரியை எதிர்க்கவில்லை. மகாராஷ்டிராவில் 95களில் பாஜக-சிவசேனா அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுடன் நெருக்கமாக இருந்தார், மேலும் அவரது மகன் உத்தவ் தாக்கரேவுடன் நட்புறவுடன் உள்ளார்.

    மோகன் பகவத்

    மோகன் பகவத்

    கடந்த வார இறுதியில், சிவசேனாவின் மூத்த தலைவர் கிஷோர் திவாரி மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதினார், நெருக்கடியைத் தீர்க்க நிதின் கட்கரி தலையிட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்த கடிதம் குறித்து செய்தியாளர்களிடம் கேட்டபோது, கட்கரியால் இரண்டு மணி நேரத்திற்குள் நிலைமையை தீர்க்க முடியும் என்று கிஷோர் திவாரி அப்போது கூறியிருந்தார்.

    அறுதி பெரும்பான்மை

    அறுதி பெரும்பான்மை

    கடந்த மாதம் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் அறுதிப் பெரும்பான்மையுன் வென்றன, பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆனால் அக்டோபர் 24 ம் தேதி தேர்தல் முடிவகள் வெளியான பின்னர், "50:50" ஒப்பந்தத்திற்கான சிவசேனாவின் கோரிக்கையால் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

    கட்காரி முக்கியம்

    கட்காரி முக்கியம்

    மகாராஷ்ராவில் அரசு அமைப்பதற்கு வெறும் 24 மணிநேரம் மட்டுமே கெடு உள்ள நிலையில், நிதின் கட்கரி நாக்பூர் சென்றுள்ளதால் பிரச்சனை இன்றே தீர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்காளி சண்டை பகையாளி சண்டையாது என்று பாஜக உறுதியாக நம்புகிறது. ஏனெனில் 24 மணி நேரத்திற்கு ஆட்சி அமையாவிட்டால் தேவேந்திர பட்னாவிஸ் பதவி காலம் முடிந்து மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.

    English summary
    Nitin Gadkari's Sudden fly To Nagpur As With just 24 hours Deadline to form government in maharashtra. he will meet Mohan Bhagwat, the chief of the Rashtriya Swayamsevak Sangh (RSS)
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X