உதய்ப்பூர் டெய்லரை போல் மகாராஷ்டிராவில் கொலை.. உண்மையை மறைத்த போலீஸ்? பகீர் கிளப்பும் எம்பி
மும்பை: நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் உதய்ப்பூர் டெய்லரை போல் மகாராஷ்டிராவில் மெடிக்கல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டாலும் கூட அதற்கான உண்மை காரணத்தை அமராவதி போலீஸ் கமிஷனர் மறைத்துள்ளார். இவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என எம்பி நவ்நீத் ராணா கூறியுள்ளார்.
Recommended Video
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தெலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருப்பினும் நுபுர் சர்மாவின் கருத்து தொடர்பாக பிரச்சனைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

மகாராஷ்டிராவிலும் கொலை
இந்தி விஷயத்தில் தினம் தினம் பிரச்சனைகள் எழுந்து வருகிறது. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் டெய்லர் கண்ணையாலால் கொலை செய்வதற்கு முன்பாகவே மகாராஷ்டிரா மாநிலம் அமராவாதி மாவட்டம் கோத்வாளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி மெடிக்கல் கடைக்காரர் உமேஷ் பிரஹலாத்ராவ் (வயது 54) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நுபுர் சர்மா ஆதரவு கருத்தால்...
அதாவது உமேஷ் பிரஹலாத்ராவ் கடந்த ஜூன் 21 இரவில் மெடிக்கல் கடையில் இருந்து டூவீலரில் வீட்டுக்கு சென்றார். அப்போது மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முதாசீர் அகமது (22), ஷாரூக் பதான் (25), அப்துல் தவ்பிக் (24), சோயிப் கான் (22), அதிப் ரசீத் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஷமீம் அகமது பெரோஸ் அகமது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் நுபுர் சர்மாவை ஆதரித்து உமேஷ் பிரஹலாத்ராவ் வாட்ஸ்அப் குழுவில் கருத்து பகிர்ந்ததால் அவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது.

எம்பி குற்றச்சாட்டு
இதேபோல் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ராஜஸ்தான் உதய்ப்பூரில் டெய்லர் கண்ணையா லால், கடந்த மாதம் 28 ல் கொலை செய்யப்பட்ட நிலையில் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு முன்பே உமேஷ் பிரஹலாத்ராவ் அதேவிவகாரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் போலீசார் இந்த கொலைக்கான காரணத்தை மறைத்துள்ளதாக அமராவதி எம்பி நவ்நீத் ராணா குற்றம்சாட்டியுள்ளார்.

போலீஸ் கமிஷனரிடம் விசாரணை
மேலும் இந்த விவகாரத்தில் அமராவதி நகரின் போலீஸ் கமிஷனர் ஆர்த்தி சிங்கிடம் விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இதுபற்றி நவ்நீத் ராணா கூறுகையில், ‛‛உமேஷ் பிரஹலாத்ராவ் கொலை தொடர்பாக 12 நாட்களுக்குப் பிறகு போலீஸ் கமிஷனர் ஆர்த்தி சிங் விளக்கம் அளித்து வருகிறார். முதலில் இது கொள்ளை என்று கூறி வழக்கை முடிக்க முயன்றனர். இதுதொடர்பாக அமராவதி போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த வேண்டும்'' என கூறியுள்ளார்.

என்ஐஏ விசாரணை
நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டுள்ள கண்ணையா லால் மற்றும் உமேஷ் பிரஹலாத்ராவ் ஆகியோரின் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதனால் இந்த 2 வழக்குகளையும் என்ஐஏ வசம் விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications