மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

144 போட்டாச்சு.. டிசம்பர் 31 வரை தடை உத்தரவு.. விரட்டும் ஒமைக்ரான்.. பீதியில் உறைந்திருக்கும் மும்பை

மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

மும்பை: ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 73க உயர்ந்துவிட்ட நிலையில், மும்பையில் டிசம்பர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தில் இருந்தே இன்னும் நாம் மீண்டெழாத நிலையில், ஒமிக்ரான் வைரஸ் வந்து மிரட்ட ஆரம்பித்துவிட்டது.. தென்ஆப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கிய இந்த வைரஸ், வீரியமிக்கது.. வேகமாக பரவக்கூடியது..

 காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது

இந்த வைரஸ் வெளிநாடுகளில் பரவி வந்தபோதே, நம் நாட்டுக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ கட்டுப்பாடுகளை விதித்தது.. ஆனாலும் எப்படியோ நம் நாட்டிற்குள் வந்துவிட்டது..

தொற்று

தொற்று

கடந்த 15 நாட்களுக்குள் இந்தியா உள்பட 77 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது... இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துவிட்டது. நம் தமிழ்நாட்டிலும் நேற்று ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.. அதேபோல கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உட்பட பல மாநிங்களில் இந்த வைரஸ் அதிகரித்தும் வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை 28 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது...

தடை

தடை

அதன் தலைநகர் மும்பையில் மட்டும் இதுவரை 13 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதனால், மும்பையில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த தடை உத்தரவு இன்று அதிகாலை 12.01 மணி முதல் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என்றும், அடுத்த 14 நாட்களுக்கு நகரில் எந்தவிதமான பொதுக்கூட்டமோ அல்லது மக்கள் கூடும் வகையிலான நிகழ்ச்சியோ, போராட்டமோ எதையும் நடத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையம்

ஆணையம்

இது சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், சிறிய நிகழ்ச்சிகள் என்றால் மட்டும் 50 சதவீதம் பேர் கலந்து கொள்ளவேண்டும், அதுவே 1000 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால், அதற்கு உள்ளூர் பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு தகவல் தர வேண்டும்.. மகாராஷ்டிர மாநிலத்துக்கு வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் அல்லது 72 மணிக்கு நேரத்துக்கு முன் எடுத்த ஆர்டிபிசிஆர் டெஸ்ட் ரிப்போர்ட்டுடன் வர வேண்டும்... ஹோட்டல்களில் 50 சதவீதம் கஸ்டமர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை

தடை

வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் மேலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது... இவ்வாறு தடை விதிக்க காரணம், இந்தியாவில் 2022ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஒமிக்ரான் தாக்கம் அதிகம் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

அதுமட்டுமல்ல, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில் மக்கள் அதிகளவில் பொது இடங்களில் கூடுவதால், அந்த சமயத்தில் ஒமைக்ரான் பரவ வாய்ப்பு உள்ளது என்பதாலும்தான், 31-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.. இம்மாநிலத்தில் இதுவரை 32 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.. அனைவரும் 16 முதல் 67 வயதுக்கு உட்பட்டவர்கள்.. இதில் 4 பேருக்கு நோய் பாதிப்பு அறிகுறிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Omicron Virus rises to 73 in India and section 144 imposed in mumbai from december 16 to december 31
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X