விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி மட்டும் தான் பாஜகவில் சேர வேண்டிய பாக்கி: சிவசேனா கிண்டல்
மும்பை: நாட்டை விட்டு தப்பியோடி பொருளாதார குற்றவாளிகளான , மெகுல் சோக்சி, நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகிய 3 பேர் மட்டும் தான் பாக்கி, இவர்கள் மட்டும் தான் பாஜகவில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறார்கள் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி கடுமையாக விமர்சித்துள்ளது.
சிவசேனாவை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்துள்ளது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்த சிவசேனா திடீரென பாஜகவை கைவிட்டுவிட்டு, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைத்தது உத்தவ் தாக்கரே முதல்வரானார். இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிவசேனாவின் ஒரு பாதி எம்எல்ஏக்கள் ஷிண்டே தலைமையில் பாஜகவிற்கு ஆதரவு அளித்தனர். இதனால் தற்போது ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்வராக உள்ளார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக, சிவனோ(ஷிண்டே அணி) கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.
இது ஒருபுறம் எனில், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் ஒரு பாதி எம்எல்ஏக்கள் , பாஜக, சிவனோ கூட்டணிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தனர். இதையடுத்து அஜித் பவார் மகாராஷ்டிரா துணை முதல்வராகி உள்ளார்.
இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி, தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில், பொருளாதார குற்றவாளிகளான மெகுல் சோக்ஸி, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் மட்டுமே பாஜகவில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறார்கள் எனறு விமர்சித்துள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவனோ அணியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் விமர்சிக்கப்பட்டுள்ளது. அஜித் பவார் தலைமையில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி பிளவை சந்தித்ததன் பின்னணியில் பாஜக டெல்லி மேலிடம் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு ஊழல், ஒழுக்கம் மற்றும் மோசடி பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று சாம்னா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
"மகாராஷ்டிராவில் பாஜக செய்த காரியத்திற்காக அந்த கட்சி கேலி செய்யப்படுகிறது. மெகுல் சோக்சி, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகிய 3 பேரை கட்சியில் சேர்த்துக்கொள்வது மட்டுமே பாக்கி. ஒருவர் கட்சியின் தேசிய பொருளாளராகவும், இரண்டாவது நிதி ஆயோக்கிலும், மூன்றாவது இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பாஜகவால் நியமிக்கப்படுவார்கள்" என்று கிண்டல் செய்தது.
மெகுல் சோக்சி, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் பொதுத்துறை வங்கிகளை தங்கள் நிறுவனங்கள் மூலம் மோசடி செய்து, ஆயிரக்கணக்கான கோடிகளை மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்கள். இது தொடர்பாக இந்தியாவில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் 2014 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, நீர் பாசன ஊழல் குற்றச்சாட்டில் அஜித் பவார் சிறைக்குச் செல்வார் என்று ஃபட்னாவிஸ் கூறினார், ஆனால் அஜித் பவார், பட்னாவிஸ் முன்னிலையில் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார் இதை சுட்டிக்காட்டித்தான் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications